ஷோபாக்ருத் வருஷ தர்ப்பண ஸங்கல்பம். 2024-2025. Shannavathi Tharpanam Sankalpa Mantras 2024-2025 in Tamil, 96 Tharpana Shraddha Sankalpam.
ஷண்ணவதி தர்பண ஸங்கல்பம். 2024-25. மடத்து பஞ்சாங்கம் திருகணிதம்.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.
மயா அனுஷ்டித, வர்கத்வய பித்ரூன் உத்திஶ்ய , தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யார்த்தம் யதா சக்தி ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததே. ஓம் தத்ஸத். வாத்யாரிடம் பைசா கொடுத்து விடவும்.
ஷண்ணவதி தர்ப்பணம் செய்பவர்களுக்கு: – முசிறி அண்ணா வாக்கு
வ்யதீபாதமும் மன்வாதியும் ஒரே நாளில் வந்தால் வ்யதீபாத தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.
வ்யதீபாதமும் அஷ்டகாவும் ஒரே நாளில் வந்தால் அஷ்டகா தர்ப்பணம் மட்டும் போதும்.
மன்வாதியும் வைத்ருதியும் ஒரே நாளில் வந்தால் மன்வாதி தர்ப்பணம் மட்டும் போதும்
மாத பிறப்பும் வைத்ருதியும் ஒரே நாளில் வந்தால் மாத பிறப்பு தர்ப்பணம் மட்டும் போதும்.
மாத பிறப்பும் அமாவாசையும் ஒரே நாளீல் வந்தால் மாத பிறப்பு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.
அமாவாசையும், யுகாதியும் ஒரே நாளில் வந்தால் யுகாதி மாத்திரம் செய்தால் போதும்.
அமாவாசையும் மன்வாதியும் ஒரே நாளில் வந்தால் மன்வாதி மாத்திரம் செய்தால் போதும்.
அமாவாசையும் வ்யதீபாதமும் ஒரே நாளில் வந்தால் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும். வ்யதீபாத தர்ப்பணம் செய்தாலும், செய்யலாம். தவறில்லை.
அமாவாசையும் வைத்ருதியும் ஒரே நாளில் வந்தால் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும். வைத்ருதி தர்ப்பணம் செய்தாலும் தவறில்லை.
மாத பிறப்பும் மன்வாதியும் ஒரே நாளில் வந்தால் முதலில் மாதபிறப்பு தர்ப்பணம். பிறகு மன்வாதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மஹாளயம், வ்யதீபாதமும் ஒரே நாளில் வந்தால் முதலில் வ்யதீபாத தர்ப்பணம், பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மஹாளயமும் யுகாதியும் ஒரே நாளில் வந்தால் முதலில் யுகாதி தர்ப்பணம், பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மஹாளயமும் அமாவாசையும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை, பின்னர் மஹாளய தர்ப்பணமும் செய்ய வேன்டும்.
மாத பிறப்பு, மன்வாதி, வைத்ருதி ஒரே நாளில் வந்தால் முதலில் மாதபிறப்பு, பின்னர் மன்வாதி தர்ப்பணம் செய்தால் போதும்.
அமாவாசை அன்று சூர்ய கிரஹணம் மாலை 3-30 மணிக்குள் வந்தால் கிரஹண தர்ப்பணம் மட்டும் போதும்.
13 April 2024 சனி கிழமை சித்திரை வருட பிறப்பு.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாசர ம்ருகசிரோ நக்ஷத்ர ஶோபன நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீணாவீதி)————— அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்ணிய காலே மேஷ ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
23 April 2024 செவ்வாய் கிழமை ரெளச்சிய மன்வாதி
குரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர சித்ரா நக்ஷத்ர வஜ்ர நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————–
அக்ஷய த்ருப்தியர்த்தம் ரெளச்சிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
25 April 2024 வியாழகிழமை வ்யதீபாதம்.
குரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாஸே கிருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள குரு வாசர, விசாகா நக்ஷத்ர வ்யதீபாத யோக தைதுள கரண ஏவங்க்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————
அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2024-2025
16 September 2023 good muhart for
Baby born by ceserian
Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
Thank you.
Ramanujam