63 நாயன்மார்கள்

11. எறிபத்த நாயனார்
அமராவதியாற்றின் கரையில் உள்ள கரூரில் பிறந்தவர் எறிபத்தர். அங்குள்ள ஆநிலைக் கோவிலின் பசுபதீசுவரரை வணங்கி வந்தார். எறிபத்தர் அடியார்களுக்கு தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார். அடியார்களுக்கு இன்னல் ஏற்பட்டால் பரசு என்ற ஆயுதத்தால் அவர்களைக் காப்பாற்றி உதவுவார்.

அதே கரூரில் சிவகாமி ஆண்டார் என்ற அடியர் வைகறைப்பொழுது எழுந்திருந்து நீரில் மூழ்கி குளித்து திருநீறு அணிந்து வாயினைக் கட்டி நந்தவனத்தில் மலர் பறித்து ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு மலர்களை மாலையாக்கி தினமும் இறைவனுக்குச் சூட்டி மகிழ்வார். ஒருநாள் அப்படி அவர் துய்மையுடன் மாலையை இறைவனுக்குச் சூட்ட எடுத்து வரும்போது மன்னனுக்கு பிரியமான பட்டத்து யா ணைக்கு மதம் பிடித்து சிவகாமி ஆண்டாரின் கையிலிருந்த மாலையை வீசி எறிந்து நாசம் செய்தது. அப்போது அங்கு வந்த எறிபத்தர் கோபத்தினால் கொதித்து எழுந்தார். மதம் பிடித்த யானையின் துதிக்கையை வெட்டினார். பாகர்களையும் வெட்டினார்.
கேள்விப் பட்ட மன்னர் நடந்தவற்றை அறிந்தார். சிவபக்தி மிக்க மன்னன் தானும் குற்றவாளியே, என்னை தாங்கள் என் வாளினால் தண்டியுங்கள் எனத் தன் வாளினை எடுத்து தந்தான்.

எறிபத்தர் புகழ்ச்சோழரின் பக்தியைக் கண்டு நான் இருப்பதில் பயன் இல்லையென்று தன்னை வெட்டிக்கொள்ள முயன்றார். புகழ்ச் சோழர் பதறிப்போய் தடுத்தார். வானிலிருந்து ‘அன்பர்களே உங்கள் இருவரது அன்பினையும் உலகறியச்செய்யவே நாம் இவ்வாறு செய்தோம்’ என்று ஒலித்தது. யானையும் பாகரும் உயிர் பெற்றனர். சிவகாமி தொண்டர், எறிபத்தர் திருத்தொண்டு செய்து கயிலையில் சிவகணத் தலைவராக ஆனார்.

12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்
திருப்பெருமங்கலம் என்ற ஊரில் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் பக்தியும் கொண்டிருந்தார். தான் வழிபடும் சிவனை நம்பிஆரூரர் தன் மனைவி பொருட்டு தூது விடுவதை அறிந்து கோபப்பட்டார். இறைவன் தன் நாடகத்தை நடத்த தொடங்கினார். கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக் கொடுத்தார். அப்போது பெருமான் தோன்றி உன்னை வருத்தும் சூலையை ஆரூரர் வந்து தீர்க்காவிடில் உம் சூலை தீராது என்றார். அதைக் கேட்ட கலிக்காமர் கொதித்தார். ஆரூரர் வந்து அந்த நோய் தீரும் என்றால் அந்த நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவன் ஆரூரர்பால் சென்று கலிக்காமர் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாய் என்றார். இறைவன் ஆணையை ஏற்று தான் வருவதை சொல்லி அனுப்ப, ஆரூரர் என் சூலையை தீர்க்க வருவதற்குள் நான்மாய்வேன். வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் எனக்கூறி குத்த உயிர் பிரிந்தது.

ஆரூரர் வந்தார். குடல்சரிந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கலிக்காமரை காண்பித்தனர். அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்வேன் என உடைவாளை எடுத்து குத்திக்கொள்ள போனார். இறைவன் அருளினாலே கலிக்காமர் விழிப்புற்று நம்பி ஆரூரர் கரத்தைப்பற்றி நண்பனாக இருந்து நான் கெட்டேன் என வருந்தினார். நோய் நீங்கி இருவரும் திருபுன்கூரில் வழிபட்டு சிலநாள் அங்கிருந்தனர். ஆரூரர் திருவாரூர் சென்றார். ஏயர்கோன் கலிக்காமர் இறைபணிதொடர்ந்து சிவனடி சேர்ந்தார்.

Write Your Comment