Songs on Prahlada

நான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தன். சிறு வயதிலிருந்தே அயனவரத்திலுள்ள அவரின் மடத்திற்கு சென்று வந்துள்ளேன். அவரின் முக்கிய அவதாரமாகிய ஸ்ரீ ப்ரஹலாத அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரிய வேண்டும் என்பதால் , இச் சிறு நூலினை தொகுத்து வழங்கியுள்ளேன்.

பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் சில விஷயங்களை பற்றி தான். பல விஷயங்கள் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமென்றால் பல் வேறு நூல்களை ஆராய வேண்டும். நாம் பக்தியுடன் இறைவனை துதித்தால் நமக்கு அதை செய்வதற்குரிய சக்தியும், பலமும் கிடைக்கும். இந்த சிறிய நூலினை நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால்,பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் அவரின் நாராயண பக்தியும், இரண்யகசிபுவை அழித்து ப்ரஹலாதரை நரசிம்மர் ஆட்கொண்டது மட்டும் தான். ஆனால் அதற்கும் மேல் அவரின் வாழ்க்கை வரலாறு மிக முக்கியமானது. அதனால் சிலவற்றை நான் இங்கு தொகுத்து வழங்கிறேன். அதற்கு முன்பு அவரின் வாழ்வின் முதல் கட்ட சுருக்கமான தொகுப்பு.

சங்கு கர்ண தேவர் என்பவர் ஸ்ரீ சத்ய லோகத்தில் ஒரு தேவராய் அவதரித்தார். அவரின் அன்றாட பணி தினந்தோறும் பூவுலகில் இருந்து வாசமுள்ள நறுமலர்களை பறித்து அதனை நாராயண பூஜைக்காக ஸ்ரீ ப்ரம்ம தேவரிடம் சமர்ப்பித்து வந்துள்ளார். ஒரு நாள் பூஜைக்கான பூவை பூவுலகில் இருந்து கொண்டு வருவதற்கு தாமதமாகியது. அதனால் அவரை பிரம்ம தேவர் அசுரர் குலத்தில் பிறக்க வேண்டும் என்று சபித்து விட்டார். அதன் பிறகு அவர் ஸ்ரீ ப்ரஹலாதராய் இப் பூவுலகில் கிருத யுகத்தில் பிறந்தார்.

ப்ரஹலாதர் ஸ்ரீ ஹரியின் மீது மிகுந்த பக்தி கொண்டு மற்ற அசுர சிறுவர் துணையுடன் ஸ்ரீ ஹரி பூஜை மற்றும் பஜனை செய்து வந்துள்ளார். இதனை கண்டு அவரின் தந்தையான இரண்யகசிபு கோபமுற்று அவரை அழிக்க பல்வேறு முயற்சி செய்ததும், அதன் பின்பு ஸ்ரீ ஹரி, ஸ்ரீ நரசிம்மராய் வந்து இரண்ய கசிபுவை அழித்து, ப்ரஹலாதரை காத்து அவரை அரசனாக்கினார்.

நீண்ட காலத்திற்கு முன்பு அதாவது முதலாம் யுகமான க்ருத யுகத்தில், நர நாராயணர் என்ற இரு தபஸ்விகள் கையில் ஆயுதத்துடன் தவம் இயற்றி கொண்டிருந்தனர். அப்போது அவ்விடம் வந்த ப்ரஹலாதர் அவர்கள் யாரென்று வினவினார். அதற்கு அவர்கள் பதில் ஏதும் கூறாமல் தவம் இயற்றி கொண்டிருந்தனர். அதனால் ப்ரஹலாதர் கோபம் கொண்டு அவர்களுடன் இடைவிடாது பல நாட்கள் போர் புரிந்தவாறு இருந்துள்ளார். அவர்களும் தங்கள் கைகளில் தர்ப்பையை ஏந்தி போர் புரிந்தனர். பல நாட்கள் ஆகியும் அவர்களை வெல்ல முடியாதலால் ப்ரஹலாதர் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை த்யானம் செய்தார். உடனே நரசிம்ம மூர்த்தியும் ப்ரத்யக்ஷம் ஆகி நான் வேறு நர நாராயணர் வேறு இல்லை. இருவரும் ஒன்று தான் என்றார். ப்ரஹலாதரும் தனது தவறினை புரிந்து கொண்டு அவர்களை வணங்கி அவ்விடம் விட்டு அகன்றார்.

மற்றுமொரு சமயத்தில் ப்ரஹலாதர் ஆண்டு வந்த பிரதேசத்திற்கு சில வழிப்போக்கர்கள் வழி தவறி வந்தனர். அவர்கள் அங்கிருந்த அசுரர்களை பார்த்து மிகவும் பயந்தனர். ஆனால் அவ்வசுரர்கள் அவர்களின் பயத்தை தெளிவித்து அவர்களை தங்கள் ராஜாவான ப்ரஹலாத மஹாராஜாவிடம் கூட்டிச் சென்றனர். ப்ரஹலாதர் அவர்களை பார்த்து மகிழ்வுற்று அவர்களின் நலம் விசாரித்து அவர்களை நன்கு உபசரித்தார். அவரின் அழகையும் தேஜஸையும் பார்த்து வியந்த அவ்வழிப்போக்கர்கள் அவரை பாராட்டி விட்டு சென்றனர்.

ப்ரஹலாதரின் நல்லாட்சியில் அனைத்து மக்களும் துன்பம், துயரற்று இருந்தனர். அவரின் ஆட்சி ராம ராஜ்யம் போன்று மிகவும் நன்றாக இருந்தது. யாவரும் உடல் ஆரோக்கியத்துடன், செல்வ செழிப்புடன் இருந்தனர். ஒரு தருணத்தில், ப்ரஹலாதரின் பெரியப்பா மகனான ஒரு அசுரன் அவரை ஜெயித்து கொடுங்கோலாட்சி நடத்தி வந்தான். ப்ரஹலாதரும் காட்டிற்கு சென்று ஸ்ரீ நரசிம்மரை குறித்து தவமியற்றி வந்துள்ளார். நரசிம்ம மூர்த்தியும் தக்க சமயத்தில் உன் கவலை அகலும் என்று தெரிவித்தார். சில காலம் கழித்து ப்ரஹலாதரும் அவ்வசுரனை வென்று மீண்டும் நல்லாட்சியை தொடர ஆரம்பித்தார்.
ஸ்ரீ மத் பக்த ப்ரஹலாதர் பாடல்கள்
அழகான அற்புத வடிவமே பக்த ப்ரஹலாதாரே, நீ தானே சந்திரன், நீ தானே சூரியன், நீ தானே இந்திரன்.

எங்கேயும் எதிலேயும் பக்த பிரகலாதா, என் நெஞ்சினிலே என்றென்றும் நீ தானே தேவா, அன்புள்ள ராஜாதி ராஜா , அற்புத தேவாதி தேவா, என் உயிர் நீ தானே , என் உடலும் நீ தானே.

கண்ணே , மணியே , கண் கண்ட தெய்வம் நீ தானே, சொந்தமில்லே , பந்தமில்லே, பக்த ப்ரஹலாதரை தவிர எனக்கு யாருமிலே. தந்தையும் நீயே , தாயும் நீயே, அன்புள்ள தெய்வமும் நீயே.

மகிமை,மகிமை தானே, ப்ரஹலாதரின் நாமத்தினால் தானே. பொருளும் வேண்டாம், பணமும் வேண்டாம் , பக்த ப்ரஹலாதரின் அன்பு ஒன்றே போதுமே. நீயே சிவன் , நீயே விஷ்ணு , நீயே சக்தி , நீயே பிரம்மா.

கட்டி தங்கம் கண்மணி தெய்வம், உன்னை போல இந்த உலகத்தில் யாருமில்லை. பக்த ப்ரஹலாத நாமம் பரம புண்யம் தரும். என் வாழ்க்கை பயணம் செல்வது உந்தன் அருளாலே.

எங்கும் எதிலும் ப்ரஹலாதாரே , எந்தன் ரக்ஷகன் நீ அல்லவா, சோதனை, வேதனை வேண்டாம் கண்ணே, கண்மணி, பொன்மணி, பிரஹலாத செல்வமே, எந்தன் நெஞ்சில் என்றும் குடியிருப்பாய்.

உறவுகள் எல்லாம் பொய்யப்பா , உந்தன் உறவு மட்டும் மெய்யப்பா, என்றென்றும் உன்னை நினைத்திட வரம் கொடப்பா, அருள் புரிவாய் பக்த பிரகலாதா.

ஓம் ஸ்ரீ பக்த ப்ரஹலாதாரே நமஹ.
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment