63 நாயன்மார்கள்

49. நின்றசீர்நெடுமாற நாயனார்
கூன் பாண்டியன் மதுரையை அரசு புரிந்து வந்தார். துணைவியார் மங்கையர்கரசி. அமைச்சர் குலச்சிறையார். நின்ற சீர் நெடுமாறன் சமணத்தை தழுவியிருந்தார், துணைவியார் மங்கையர்கரசி. அமைச்சர் குலச்சிறையார் இருவரும் சைவத்தைப் போற்றினர். மன்னன் சமணத்தை சார்ந்திருந்ததால் சமணர்கள் கை ஓங்கியிருந்தது.

இதை சரிசெய்ய மங்கையர்கரசியார் குலச்சிறையர் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தார். அவர் தங்கியிருந்த மாளிகையை மன்னர் விருப்புடன் சமணர்கள் தீக்கிரையாக்கினர். ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு மன்னன் சம்மதத்துடன் சமணர்கள் தீ மூட்டினர். அவர்கள் செய்தது மன்னவனைச் சாரும் என்றும் ‘தீபையவேசெல்க’ என்றார். காலையில் மன்னவனால் எழுந்திருக்க முடியவில்லை. தன்னுடன் வந்த அடியர்களையும் துன்புறத்த காரணமாகிய சமணர்களுக்கு ஊக்கம் கொடுத்த கூன் பாண்டியனை அந்த வெப்பம் சாரட்டும் என ஞானசம்பந்தர் பாட வெப்ப நோயால் அவதிப்பட்டான் மன்னன். நோயின் தாக்கத்தால் சைவ நெறியை நாடினான்.

ஞானசம்பந்தர் அடியவர்களுடன் ஆலவாய் சென்று பெருமானை வழிபட்டு மன்னனைக் காணச்சென்றார். சமணர்கள் வாது செய்யலாம் என்றனர். மன்னனோ என் பிணியை யார் நீக்குகின்றீகளோ அவர் பக்கம் நான் இருப்பேன் என்றான். சமணர்கள் நாங்கள் ஒரு பக்கம் நீக்குகின்றோம் மறுபக்கம் அவர் நீக்கட்டும். அவரால் குண்மடைந்தாலும் எங்களால் குணமடைந்ததாக கூறவேண்டும் எனக் கூறினர். மன்னன் அதற்கு இசையவில்லை. இடதுபுறம் மன்னனின் வெப்பு நோயையைத் தீர்க்க சமணர்கள் மந்திரம் ஓதியும் மயிற்பீலி கொண்டும் செய்த முயற்சி பலிக்கவில்லை. கூன் பாண்டியனுக்கு சூலை நோய் தாக்கியதை சமணர்களால் சரி செய்ய முடிவில்லை. அவர்களின் மந்திரநீர் சுட்டது.

வலப்புறம் ஞானசம்பந்தர் திருநீறு எடுத்து ‘மந்திரமாவது நீறு’ எனப்பதிகம் பாடி தன் திருக்கரத்தால் தடவினார். அவர் கைபட்டதும் உடல் நோய் வலப்பக்கம் தீர்ந்து சொர்க்கமாகவும் இடப்பக்கம் நரகமாகவும் இருக்க கண்ட மன்னன் இடது புறமும் தாங்களே குணமாக்க வேண்டும் என வேண்டினான். மன்னன் முற்றும் குணமடைந்தான். ஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையை பேசுமின் என்றார். வாய்வெல்ல வேண்டியதில்லை. இருதரப்பாரும் அவர்தன் சமய பெருமைகளை எழுதி அதைத்தீயிலே போட்டால் வேகாத ஏடு உண்மை சமயம் என்றனர்.

மன்னன் ஆணைப்படி தீ மூட்டப்பட்டது. ஞானசம்பந்தர் இதுவரை பாடிய பாசுரங்களை கொண்டுவரச்செய்து வணங்கி அந்த கட்டின் கயிற்றை அவிழ்த்து ஒர் ஏட்டை எடுத்தார். தளிரிள வளதொளி என பதிகம் பாடி ’போகமார்த்த பூண்முலையாள்’ என்ற பாட்டினை தீயிலிட்டு தீயில் வேகாது நிலைபெறுக என்றார். அது எரியாமல் பச்சையாக இருந்தது. அதனால் அது ‘பச்சைஏட்டு பதிகம்’ எனலாயிற்று. சமணர்கள் ஏடு தீயிலிட்டது கருகியது.

ஆனால் சமணர்கள் மூன்று முறை செய்து உண்மை காண்பதே முறை என்று ஆற்றில் ஏட்டினை விட்டு அது எதிர்த்து வந்தால் அதுவே உண்மையானது என்றனர். அப்போது குலச்சிறையார் இவ்வாதில் தோற்றால் தோற்றவர்களை மன்னன் கழுவில் ஏற்றவேண்டும் என்றதற்கு சமணர்கள் ஒப்புதல் அளித்தனர். தங்கள் மந்திரமான் ‘அஸ்திஆஸ்தி’ யை எழுதி ஆற்றில் போட்டனர் சமணர். அது கடலைநோக்கி ஓடியது. ஞானசம்பந்தர் ஓர் பதிகம் எழுதி வைகையில் போட்டார். அது எதிர்த்து வந்தது. கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ஆகினான்.குலச்சிறையார் அந்த ஏட்டினை எடுத்துவந்தார். சமணர்களை கழுவில் ஏற்றிய மன்னன் தன் துணைவியருடன் சைவத்தில் இனைந்து திருத்தொண்டுகள் பல செய்தான். கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் என அழைக்கப்பட்டான்.

வடபுலத்து பகை மன்னர் திருநெல்வேலியில் நால்வகைச் சேனையுடன் போர் தொடுக்க வெற்றி பெற்று ஆலயப்பணிகளில் தன் முழுகவனத்தைச் செலுத்தினார். திருநீற்றின் பெருமையை விளக்கி அனைவரும் திருநீறு பூசச்செய்தார். பல ஆண்டுகள் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading