63 நாயன்மார்கள்

8. இயற்பகை நாயனார்
சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். இவர் தன்னுடையதை என்னுடையது என எண்ணாதவர். அடியார் எது கேட்டாலும் வேண்டுவனவற்றை இல்லை என்று சொல்லாமல் வழங்குபவர். இவ்வடியவரின் திறத்தை உலகுக்கு அறியச் செய்ய நினைத்து சிவன் மாறுவேடம் பூண்டு புறப்பட்டார். இயற்பகை இல்லம் வந்தார். ‘உன் காதல் மனைவியைத் தா’ என்றார் அடியவர்.

செய்தி கேட்ட மங்கை கலங்கினார். கணவரின் மனநிலை அறிந்து தெளிந்தார். அடியார் அவரின் பற்றற்ற உள்ளத்தை பாராட்டுகிறார், உடன் தன் சுய ரூபத்தில் பெருமான் வானில் வெள்ளிவிடைமீது தோன்றி உம் துனைவியோடு நம்முடன் வா என அருள் புரிந்தார்.

9. இளையான்குடி மாற நாயனார்
இளையான்குடி யில், வேளாளார் குலத்தில் பிறந்து விவசாயம் செய்து வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். விட்டை விட்டு வெளியில் வந்து பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது படைப்பார். மகேசுவர வழிபாடு செய்து வந்தார்.

காலப்போக்கில் அவரின் செல்வ வளம் சுருங்கியது. அவரின் மனம் சுருங்கவில்லை. கடன் பெற்றும் சொத்துக்ளை அடமானம் வைத்தும் தொண்டு செய்துவந்தார்.

ஒரு நாள் சிவபெருமான் அடியவர் வேடத்த்தில் வந்து அவரை சோதனை செய்து ஆட்கொண்டார்

10. உருத்திர பசுபதி நாயனார்
திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் பசுபதி பிறந்தார். உருத்திரத்தை ஜெபித்ததால் உருத்திரப் பசுபதியார் என்ற பெயர் பெற்றார். அந்த ஊரில் உள்ள பொய்கையில் கழுத்தளவு நீரில் இந்த உருத்திர ஜபம் செய்து சிவ புரியை அடைந்தார்.

Write Your Comment