63 நாயன்மார்கள்

54. பெருமிழலைக்குறும்ப நாயனார்
தன்னால் பிடிக்க முடியாது போன காட்டுமுயலை பிடிக்க காலையில் சென்ற சிறுவன் கல் ஆயுதம் கொண்டு முயல் பதுங்கிய இடத்தை தோண்ட ஓர் நிலையில் கல் ஆயுதம் சிக்கிக் கொள்ள அதை சிரமத்துடன் ஆட்டி வெளியில் எடுத்தான் அங்கு ஓர் கல் தென்பட்டது. கல் ஆயுதத்தால் குத்தியபோது அது கல்லோடு மோதிய சத்தம் கேட்கவில்லை. அப்போது அக்கல்லிருந்து ஓர் ஒளி வெளிவந்து சிறுவனைச் சுற்றி அவனுள் மறைந்தது. தன்னிடமிருந்த மாட்டுக் கொம்பை எடுத்து ஊத ஊர் மக்கள் அங்கு திரண்டனர். பெரியவர் ஒருவர் உள்நோக்கி அது குன்றவில்லி சடைசாமி என்றார். உடன் அனைவரும் வணங்கி அந்த இடத்தைத் தோண்டினர்.

லிங்கம் தெரிந்தது. சிறுவன் தன் மீது பட்ட ஒளியால் தியானத்தில் அமர்ந்தான். பல வருடங்கள் சென்றன. சிவனடியாரன அவரை பெருமிழலைக் குறும்பர் என்று வணங்கினர். தமிழகத்தில் உள்ள சிவாலயங்களை தரிசிப்பதும் பின் மிழலையூர் தங்குவதுமாக இருந்தவர் திருவீழிமிழலை திருத்தலத்தில் தங்கி சிவத் தொண்டு செய்து வந்தர். சுந்தர மூர்த்தி நாயனாரை குருவாகவும் திரு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தி எந்நேரமும் யோகத்தில் ஆழ்ந்து அட்டமா சித்திகள் கை வரப் பெற்றார். சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை ஆடிமாதம் சுவாதி நட்சத்திரம். அதற்கு முந்தைய நட்சத்திரமான சித்திரையில் பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை நடக்கின்றது.
முதல்வன் திருப்பாதங்களை ஒளிவடிவாக சென்று அடைந்தார்.

55. மங்கையர்க்கரசி நாயனார்
மணிமுடிச்சோழனின் மகள் மங்கையர்கரசி ஆவார். இயற்பெயர் மானி என்பதாகும். சிவபெருமானை தன் இளமையில் இருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார். கூன் பாண்டிய மன்னனுக்கு மனைவியானார். அவரோ சமணத்தை சார்ந்தவரானார். நாட்டில் அமைதியும் நன்மையும் இல்லாமல் துன்பத்துடன் தீமை நடந்தது.

திருஞான சம்பந்தரை பற்றி அறிந்த மங்கையர்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் அவரை அழைத்து பாண்டிய நாட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தை போக்கவும் தன் கணவர் கூன் பாண்டியனை சமணத்தில் இருந்து மாற்றவும் சம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவேண்டினர்.. ஞான சம்பந்த பெருமான் மதுரைக்குவந்து ஆலவாய் பெருமானை பார்க்க விழைகிறார். அம்பிகையைக்கூடப்பாடாத சம்பந்தர் அங்கு பாடிய பதிகத்தில் மங்கையர்கரசியரைப்பற்றி இரண்டு வரிகள் பாடினார். வளவர் திருக்கொழுந்து என்ற பாராட்டைப் பெற்றார். கூன் பாண்டியனின் வெப்ப நோயைத் தீர்த்து அவனை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றியவர்.

பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க பாடுபட்டவர். பல ஆண்டு சைவம் தழைக்கசெய்து இறையடி சேர்ந்தார்.

Write Your Comment