63 நாயன்மார்கள்

50. நேச நாயனார்
காம்பீலி என்ற ஊரில் பிறந்தார் நேசர். நெசவுத்தொழிலில் ஈடுபட்டு சிவனடியார்களை வணங்கி போற்றினார். மனத்தில் சிவனுக்கு இடம் கொடுத்தார். வாக்கை ஐந்தெழுத்திற்கு உரியதாக்கினார். கையால் செய்யும் பணிக்காக கீழ் ஆடையும் கோவணமும் கொடுத்து சிவனடியார்களுக்கு உதவி செய்து வந்தார். இறுதியில் இறைவன் திருவடி சேர்ந்தார்.

51. புகழ்ச்சோழ நாயனார்
திருச்சி அருகிலுள்ள உறையூரை ஆண்ட மன்னன் புகழ்ச்சோழர். சிவபெருமானுடைய திருத்தலங்கள் பலவற்றைப் புதுபித்து நாளும் வழிபாடுகள் சிறப்புற நடைபெற வழி வகுத்தான். புகழ்ச் சோழர் கொங்கு நாட்டிலும் ஏனைய சிற்றரசர்களும் கப்பம் கட்டவேண்டும் என எதிர்பார்த்தார். கருவூர் சென்று பல நாட்கள் தங்கி பசுபதீசுவரரை வழிபட்டார்.

அங்கு சிற்றரசர்கள் கொண்டுவந்த திறைப் பொருட்களைப் பார்த்தார். தமது ஆட்சிக்கு கட்டுப்படாமல் இருப்பவர் யாரென விசாரித்து அது மன்னன் அதிகன் என அறிந்து அவன் மேல் படையெடுக்க உத்தரவிட்டார். நால்வகைப் படைகளும் சென்று அதிகனை வென்று நவநிதிகளையும் மாண்ட வீரர்கள் தலையையும் கொணர்ந்தனர்.

நவநிதிகளைப்பார்த்த மன்னன் அதனிடையில் சடைமுடியும் திருநீறும் அணிந்த தலையைக் கண்டு மனம் நடுங்கினார். கண்ணில் நீர் வழிந்தது. சிவனடியாரை என் ஆட்சியில் வெட்டியும் என் இதயம் வெடிக்காமல் இருக்கின்றது. அடியாரை கொன்ற பாவத்திற்கு ஆளானேன். அமைச்சர்களை நோக்கி இனி இந்த ஆட்சியை நீங்கள் அறநெறி தவறாது நடத்தி உரிய வேளை வந்ததும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள் என்று கூறினார்.

ஆநிலையப்பர் கோவிலுக்குமுன் தீமூட்டி உடல் முழுக்க திருநீறு பூசி சிவனடியாரின் தலையை ஒரு தட்டில் தலைமேல் வைத்துக்கொண்டு குண்டத்தை வலம்வந்து நெருப்பில் புகும்போது மலர்மழை பொய்து வானில் தேவ துந்துபிகள் முழங்கியது. புகழ்ச்சோழர் இறையடி சேர்ந்தார்.

Write Your Comment