63 நாயன்மார்கள்

4. அரிவாட்டாய நாயனார்
கணமங்கலம் என்ற ஊரில்  தோன்றினார் அரிவாட்டாய நாயனார். வேளான் குடியைச் சார்ந்தவர். மிகுந்த பொருட் செல்வம் உடையவர். ஆண்டன்மேல் மாறாத அன்பு கொண்டவர். அவர்தம் துணைவியரும் கணவர் குறிப்பறிந்து நடக்கும் தன்மையானவர். இருவரும் திருக்கோவிலுக்குச் சென்று செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் வைத்து அமுதூட்டி வணங்குவார்கள்.
சிவபெருமான் அவர் வீட்டிற்கு வருகை புரிந்து ஆட்கொண்டார்.

5. ஆனாய நாயனார்
திருமங்கலம் என்ற அவ்வூரில் இடையர் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். அவர் ஆநிரைகளை காட்டுப் பகுதிக்கு கூட்டிச்சென்று மிருகங்களிடமிருந்து பாதுகாத்து பச்சைப் புல் வெளியில் மேய விட்டு, நல்ல நீர் பருகச் செய்து, கண்ணும் கருத்துமாக மாடுகளைக் காத்து வந்தார். அப்போது எம்பெருமானை புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்து தானும் இன்புறுவார்.
ஒரு நாள் எம்பெருமான் அவ்விடம் வந்து சேர்ந்தார். “நம் உலகை அடைவாய் அங்கும் உன் குழல் ஒலிக்கட்டும்” என அருள் செய்தார்.

6. இசைஞானி நாயனார்
திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.

7. இடங்கழி நாயனார்
கொடும்பாளூர் என்ற ஊரில் இடங்கழியார் பிறந்தார். திருக்கோவில்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார். அடியவர்களுக்கு உதவிகள் செய்து வந்தார்.

அந்த ஊரில் சிவனந்தன் என்ற அடியார் மகேசுவர பூசை செய்து அடியவர்களுக்கு அமுது செய்து வந்தார். ஒருநாள் அதற்கான பொருள் இல்லாமையால் என்ன செய்வது என தடுமாறினார். மன்னர் இடங்கழியார் பொக்கிஷத்தில் நிறைய நெல் மூட்டைகள் உள்ளது எனத்தெரிந்து, அதை திருட முடிவு செய்தார். திருத்தொண்டு செய்ய திருடுவதைத் தவிர வேறில்லை என்ற நிலையில் நடு இரவில் பொக்கிஷ அறையில் புகுந்து நெல் மூட்டையை திருட முயற்சித்தார்.

வீரர்களிடம் மாட்டிக்கொண்டார். மன்னர் முன் நிறுத்தப்பட்டார். எதற்காக இவ்வாறு செய்தீர்? என்றார். அடியார் மன்னிடம் தான் அடியவர்க்கு மகேசுவரபூசை செய்திட போதிய பொருள் இல்லாததால் திருட வந்தேன் என்றார். மன்னன் எவ்வளவு நெல், பொன், பொருள் வேண்டுமோ அனைத்தையும் எடுத்துச் சென்று தொண்டு செய்யுங்கள் என்றார். பல ஆண்டுகள் அடியவர் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

Write Your Comment