63 நாயன்மார்கள்

39. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
காஞ்சிமாநகரில் வண்ணார் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்புத்தொண்டர். தொண்டர்களின் குறிப்பறிந்து பணி செய்வதால் அவரை திருக்குறிப்புத் தொணடர் என்றனர். சிவநெறி ஒழுகும் சான்றோர். சீலமிக்கவர். அடியவர்களின் ஆடைகளை பெற்றுத் துவைத்து தூய்மை செய்து கொடுப்பவர்.

உடலும் பற்களும் நடுங்கும் குளிர்காலம். வறுமையில் வாடும் அடியவர்போல் அழுக்காண ஆடையணிந்து சிவன் திருக்குறிப்புத்தொண்டர் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்டவர் அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தார். தாங்கள் இளைத்திருக்கின்றீர்கள். உடம்பை உருக்கி உள்ளொளி பெற்றுள்ளீர். தங்கள் முகம் வாடியுள்ளதே எனக்கூறி தங்கள் ஆடை அழுக்காக உள்ளது அதை கொடுங்கள் தூய்மைசெய்து தருகிறேன் என்றார்.

அன்பரே இவ்வாடை மிகவும் அழுக்கடைந்துவிட்டது. குளிரின் கொடுமையால் இதை விட முடிய வில்லை. சூரியன் மறையும் முன்பு தருவதானல் நான் தருகின்றேன் என்றார், அதற்கு சம்மதம் தந்து ஆடையைப் பெற்று குளத்து நீரில் தோய்த்து சுத்தப்படுத்த முயன்றார். அன்று சோதனையாக மழை பெய்யத்தொடங்கியது. மழை தொடர்ந்து பெது கொண்டிருந்தது.

திருக்குறிப்புத்தொண்டரால் ஆடையை சுத்தம் செய்து தர முடியவில்லை. மழை நின்றபாடில்லை. ஆடை கொடுத்தவர் உடம்பு குளிரால் நடுங்குமே. நான் அவருக்கு உதவி செய்கிறேன் என்று தொல்லையல்லவா கொடுத்துவிட்டேன் என்று மீளாத்துயரம் கொண்டு என் தொண்டு இன்றுடன் முடிவுறும்போல் இருக்கின்றது. இனிநான் வாழ்ந்து என்ன பயன், துணி துவைக்கும் எனக்கு என் தொண்டுக்குத் துணை நின்ற கல்லிலே என் தலை மோதி இறப்பேன் எனக் கூறி வேகமாக அக்கல்லிலே மோதினார்.

அங்கிருந்து எம்பெருமான் கரம் தடுத்து விடைமீது தோன்றினார். திருக்குறிப்புத் தொண்டரே ‘நும் தொண்டினைக் கண்டு மகிழ்ந்தோம் நீர் சிவலோகம் வந்து இன்புறுவாய்’ என் அருள் புரிந்தார்.

40. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
சீர்காழியில் சிவபாத விருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும் வண்ணம் ஒர் குழந்தை வேண்டுமென பிரார்த்தித்து பெருமான் அருள் புரிய ஆண்குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்தது. சம்பந்தர்-க்கு ஆண்டுகள் இரண்டு முடிந்தது. நாள் தோறும் சிவபாத இருதயர் தோணிபுரத்தே உள்ள நீர்நிலையில் நீராடி கழுமலநாதனை நித்தமும் வணங்கியபின் தன் இல்லத்தில் உள்ள மற்ற பணிகளைப் பார்ப்பார்.
Read: Thirugnanasambandar History in Tamil (திருஞானசம்பந்தர் வரலாறு).

Write Your Comment