29. சடைய நாயனார்
திருநாவலூரிலே ஆதி சைவ மரபிலே பிறந்தார் சடையர். திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.
30. சண்டேசுவர நாயனார்
வேதங்களைத் தானம் ஈதல் ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும், ஒழுக்க நெறியிலும் ஏழு உலகங்களும் போற்றும் மிகச் சிறந்த அந்தணர்கள் வாழும் ஊரான சேய்ஞலூரில் எச்சத்தச்சன்- பவித்திரை தம்பதிகளின் மகனாக விசாரசர்மா பிறந்தார். ஐந்து வயதினிலேயே வேதங்களின் உட்பொருளில் ஈடுபாடு கொண்டார். வேதம் ஓதுப் பயிற்சியில் அதன் பொருள் இவருக்கு விளங்கியது.
ஒருநாள் தன் நண்பனுடன் சென்று கொண்டிருந்தார். அங்கு பசுங்கன்றை ஈன்ற பசுவானது ஆயனை முட்டியது. சினம் கொண்ட அவன் அதை பிரம்பால் அடித்தான். அதனைக் காணப் பொறுக்காத விசாரசர்மா பசுவினைக் காத்தார். கருணையில்லாமல் பசுவை அடிக்கின்றாயே. இனிமேல் நானே மேய்க்கின்றேன் என்று தினமும் மேயவைத்து நீர்பருகச் செய்து மாலை அவரவர் இல்லத்தில் சேர்த்தார். பசுக்களும் நிறைய பால் கொடுத்தன. ஆநிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் மகிழ்வு அடைந்தனர்.
பசுவின் பாலைப் பார்த்ததும் சிவபூஜை செய்ய ஆசை ஏற்பட்டது, மண்ணியாற்றங்கரையில் வெண்மணலால் லிங்கம் அமைத்தார். மலர்களைச் சேகரித்து பசுவின் பாலால் திருமுழுக்காட்டி மலரால் அர்ச்சனை செய்து வழிபட்டார், இது நாளும் நடக்க ஒருவன் பார்த்து அந்தணர்களிடம் சொல்லிவிட்டான். ஊர்ச்சபை கூடியது. எச்சதத்தனிடம் அதைக் கூறி நடவடிக்கை எடுக்க முடிவுசெய்தனர், வழக்கம்போல் விசாரசர்மா மாடுமேய்க்கப் புறப்படார். எச்சதத்தன் பின் தொடர்ந்தார். விசாரசர்மா தன்னை மறந்து உலகியல் உணர்வு இன்றி வழிபட்டுக் கொண்டிருந்தார். மலர் பொய்து பால் ஊற்றி வழிபட்டார். எச்சதத்தன் தனது மகனை அடித்து பால் குடத்தையும் உடைத்தார், மணற் லிங்கத்தை உதைத்தார்.
உலக நினைவற்று வழிபட்ட அச்சிறுவர் சிவபூசைக்கு ஊறு விழைவித்ததைச் சகியாமல் அருகிலிருந்த கோலை எடுத்து வீச அதுமழுவாக மாறி அவர் தந்தையின் காலை வெட்டியது. சிவபெருமான் விடைமீது தோன்றி, அருள் செய்தார்.