நாயன்மார்கள் என்போர் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார்கள் 63 நபர்கள் ஆவார்கள்.
1. அதிபத்த நாயனார்
நாகப்பட்டினம் மீனவ குலத்தில் தலைவராக இருந்தார் அதிபத்தர். வலைவீசி எடுக்கின்ற மீன்களில் ஒன்றை சிவ பெருமானுக்கு என கடலில் போட்டு விடுவார். ஒருநாள் பொன்னொளி வீசும் ஒரு மீன் கிடைத்தது. அதைப் பிடித்து சிவனுக்கு போய்ச் சேரட்டும் என கடலில் வீசினார். அவருடைய அதிபக்தியைக் கண்ட சிவ பெருமான் அவரின் முன்பு தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்.
நாகப்பட்டணம் சிவன் கோவில் அதிபக்திநாயனார் கோவில் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது.
2. அப்பூதியடிகள் நாயனார்
திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். நாவுக்கரசர் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். மிகுந்த நற்குணமுடையவர்.
ஒருநாள் திங்களூர் வந்த நாவுக்கரசர் அவரைச் சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்றார்.
யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் எனக் கருதி தவம் புரிந்தாரோ, மந்திரம் ஜெபித்தாரோ அப்பெருமான் முன்னிற்க செய்வது தெறியாது திகைத்தார். ஆடினார். பாடினார். நாகம் தீண்டி உயிரிழந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பிழை க்க வைத்தார்
அனைவரும் அமர்ந்து அமுது உண்டனர். பலநாள் அங்கு தங்கியிருந்து அருகிலிருந்த தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடினார்.
3. அமர்நீதி நாயனார்
பழையாறை என்ற ஊரில் பிறந்தார் அமர்நீதியார். வணிகம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்தார். அவர் சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து மற்றும் கோவணம் அளித்து வணங்கி வந்தார்.
பக்கத்தில் உள்ள நல்லூரில் கோவில் விழாவிற்கு குடும்பத்துடன் சென்று மடம் அமைத்து அன்பர்களுக்கு அமுது படைத்து அளித்து வந்தார். எம்பெருமான் மறையவர் குலத்து பிரம்மச்சாரி வேடம் தாங்கி வந்தார். அவரை மலர்ந்து வரவேற்றார் மற்றும் அவர் வைத்த சோதனையிலும் வென்றார் அமர்நீதியார்.