அஞ்சனா

அஞ்சனா பகவான் ஹனுமானின் அன்னை. த்ரேதா யுகத்தில் வாழ்ந்தார். பண்டைய புராணத்தின்படி, அஞ்சனா தன் முந்தைய பிறவியில் விண்ணுலக நர்த்தகி. சொர்க்கத்தில் ஒரு தெய்வீகக் கலைஞனாக இருந்தாள்.

வாயுபகவானாகிய காற்று தேவன், சிவனின்சக்திகளை, அஞ்சனாவின் கருப்பைக்குள் செலுத்தினார். இவ்வாறு அனுமன் சிவனின் அவதாரமாக பிறந்தார். கர்நாடகாவில் உள்ள ஆஞ்சநேயாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில், அஞ்சனா ஒரு குடும்ப தெய்வமாக வணங்கப்பட்டு, அவளுக்கு ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாகனம் தேள்.

மாதா அஞ்சனா, நல்ல குணங்களை உடைய ஒரு தேவி. மாதா யசோதை கண்ணனிடம் அன்பு செலுத்தியது போன்று, தனது குழந்தை ஹனுமான் மீது மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு, உரிய முறையில் கவனித்துக் கொண்டாள். கிருஷ்ணரை போன்று குழந்தைப் பருவத்தில் ஹனுமான் விளையாட்டு செயல்களைச் செய்து, பின்னர் வாலிப பருவத்தை அடைந்த பிறகு, அவரது நடத்தை முற்றிலும் மாறி, ராமரை வழிபடுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினார்.

மாதா அஞ்சனா இன்றளவும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தனது பக்தர்களை பாதுகாத்து, நம் வாழ்வில் பெரும் ஐஸ்வர்யம் அடைய செய்து வருகிறாள். அவள் நமக்கு நல்ல உடல் மற்றும் மன வலிமையை தருவதோடு, இறுதியில் நமக்கு மோட்சம் தருகிறாள். மாதா அஞ்சனாவை வழிபாடு செய்வோம், பாக்கியம் கிடைக்கும்.

“ஓம் மாதா அஞ்சனா தேவியே நமஹா”
“ஜெய் ஹனுமான்”
“ஜெய் ஸ்ரீ ராம்”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment