அஞ்சனா

அஞ்சனா பகவான் ஹனுமானின் அன்னை. த்ரேதா யுகத்தில் வாழ்ந்தார். பண்டைய புராணத்தின்படி, அஞ்சனா தன் முந்தைய பிறவியில் விண்ணுலக நர்த்தகி. சொர்க்கத்தில் ஒரு தெய்வீகக் கலைஞனாக இருந்தாள். வாயுபகவானாகிய காற்று தேவன், சிவனின்சக்திகளை, அஞ்சனாவின் கருப்பைக்குள் செலுத்தினார். இவ்வாறு அனுமன் சிவனின் அவதாரமாக பிறந்தார். கர்நாடகாவில் உள்ள ஆஞ்சநேயாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில், அஞ்சனா ஒரு குடும்ப தெய்வமாக வணங்கப்பட்டு, அவளுக்கு ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாகனம் தேள். […]