ராமாயணத்தின்படி, லவ மற்றும் அவரது தம்பி குசா ஆகியோர் ராமன் மற்றும் சீதை ஆகியோரின் மகன்கள். லவ மற்றும் குசா இருவரும் தங்கள் பெற்றோரை ஒத்த தோற்றத்தில் கவர்ச்சிகரமாக காட்சியளிக் கின்றனர்.லவ, குசா ஆகிய இருவரும் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர்கள். லவா மூத்த சகோதரர். குசா இளையவர்.
ராமாயணத்தின்படி, மாதா சீதா பற்றி அவரது ராஜ்யத்தின் மக்கள் கூறிய வதந்திகளால், இலங்கையில் பல ஆண்டுகள் ராவணனின் காவலுக்கு கீழ் இருந்ததாலும், ராமரால் வெளியேற்றப்பட்டு, வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் தஞ்சமடைந்தார். லவா, குசா ஆகியோர் ஆசிரமத்தில் பிறந்து, வால்மீகி முனிவரின் வழிகாட்டுதலின் படி அனைத்து வகையான கலைகளிலும் நன்கு படித்து பயிற்சி பெற்றவர்கள்.
ராமபிரானின் கதையையும் கற்றுக் கொண்டார்கள். சீதாதேவி தன் நிலையைப் பற்றி எண்ணி மிகவும் மனஅழுத்தத்தில் இருந்து சிறிது காலம் கழித்து, பூமிதேவியின் அவதாரம் என்பதால், பூமிக்குள் சென்றாள். லவா, குசா ஆகிய இருவரும் தங்கள் தந்தை ராமபிரானுக்குப்பின் ஆட்சி புரிந்து வந்தார்கள். ராமபிரானின் தெய்வீக புத்திரர்களை வணங்குவோம், வளம் பெறுவோம்.
“ஓம் ஸ்ரீ லவ, குசா நமஹ”
“ஜெய் ஸ்ரீ ராம்”
“ஜெய் மாதா சீதா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்