ஸ்ரீ கிருஷ்ணர் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாபாரதத்திலும் மற்றும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை கண்ணன் என்றும் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள், கிருஷ்ண ஜெ யந்தியாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணரின் கதைகள் இந்து மதத்தில் காணப்படுகின்றது. அவரை ஒரு தெய்வ குழந்தையாக மற்றும் குறும்புக்காரனாக குறிப்பிடப்படுகின்றது. இவரை பற்றிய குறிப்புகள் பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.
விருட்சிணி குலத்தின் சூரசேனரின் மகன் வசுதேவர் – தேவகிக்கு எட்டாவது குழந்தையாக மதுராவின் சிறையில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சனிடமிருந்து கிருஷ்ணரை காக்க, கிருஷ்ணர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனை ஆற்றுக்குப் அப்பால் உள்ள கோகுலத்தில் குடியிருந்த யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதை யிடம் ஒப்படைத்தார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாடல்கள்
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே எனதருமை நண்பனும் நீயே, கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.
இரக்கம் இல்லையா என் மேல் இரக்கம் இல்லையா, திருடா வெண்ணெய் திருடா, உன்னையே நினைத்து தினம் தினம் உருகுகின்றேனே.
அப்பா நீ தானே அன்பான ராஜா, ஆரூயிர் தெய்வமும் நீயே, எங்கள் அன்பு ரக்க்ஷகனும் நீ தானே.
கோபியர் மேல் வைத்த அன்பை என் மேல் வைப்பாயா, தாய் யசோதை மேல் வைத்த பாசத்தை என் மேல் வைப்பாயா, அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதையை எனக்கு நீ உபதேசிப்பாயா, குருக்ஷேத்திர பூமியில் பாண்டவருக்கும், கௌரவருக்கும் காண்பித்த விஸ்வரூப தரிசனத்தை எனக்கு நீ காண்பிப்பாயா எனதருமை கண்ணா எனக்கு நீ உன் முழு உருவத்தை காண்பிப்பாயா.
எனக்கு நீ எத்தனை எத்தனை கஷ்டங்களை தந்தாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன் கண்ணா, என்றும் உன்னை நான் வெறுக்கவே மாட்டேன்.
ஊரையெல்லாம் காப்பாத்தும் ஸ்ரீ கிருஷ்ணபகவானே, முதலில் உன்னுடைய கோவிலை நீ பாதுகாப்பதிக்கோ ஸ்ரீ கிருஷ்ணபகவானே. வெள்ளத்திலும் மழையிலும் முழுகாம உன் கோயிலை நீ காப்பாத்திக்கோ ஸ்ரீ கிருஷ்ணபகவானே, ஸ்ரீ கிருஷ்ணபகவானே. உன் கோயிலுக்கு அழிவு நேர்ந்தால் எங்களால் தாங்க முடியாதப்பா, எங்களால் தாங்கவே முடியாதப்பா.
ஆறுமுக தெய்வமும் நீ தானே, அதி உன்னத வடிவம் கொண்டோனும் நீ தானே, நீ தானே, இந்திரனும் நீ தானே அழகு சந்திரனும் நீ தானே, மும்மூர்த்தியும் நீ தானே, முப்பெரும் தேவியரும் நீ தானே, யானை முகத்தோனும் நீ தானே, எனதருமை பக்த ப்ரஹலாதனும் நீ தானே.
கும்பிடு கும்பிடு ஸ்ரீ கிருஷ்ணனை நீ கும்பிடு, ஸ்ரீ கிருஷ்ணனை சேவிக்காமல் இருந்தால் நாம் இருப்பதே வீண் , ஸ்ரீ கிருஷ்ணனை நினைக்காமல் இருந்தால் நம்முடைய பிறப்பே வீண், கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூறி வந்தால் நாம் அடைவோமே பேரின்பம்.
பஞ்ச பூதங்களின் நாயகனே ஸ்ரீ கிருஷ்ணபகவானே, இவ்வுலகில் பஞ்சமே ஏற்படாமல் இருக்க அருள் புரிவாயே, ஸ்ரீ கிருஷ்ணபகவானே. கண்ணே பொன்னே ஸ்ரீ கிருஷ்ணபகவானே, உனை என்றும் மறக்காமல் இருக்க எனக்கு நீ அருள் புரிவாய் கண்ணா, எனக்கு நீ அருள் புரிவாய் கோவிந்தா.
மாயங்கள் புரியும் ஸ்ரீ கிருஷ்ணபகவானே, யமபயம் ஏற்படாமல் இருக்க எனக்கு நீ அருள் புரிவாயே ஸ்ரீ கிருஷ்ணபகவானே, எனக்கு நீ அருள் புரிவாயே ஸ்ரீ கிருஷ்ணபகவானே. மீண்டும் ஒரு முறை இவ்வுலகில் நீ பிறக்க நான் வேண்டுகின்றேனே உனை நான் வேண்டுகின்றேனே.
இக் கொடுமையான கலியுலகத்தில் வலி எதுவும் ஏற்படாமல் இருக்க எங்களை நீ காப்பாயோ ஸ்ரீ கிருஷ்ணபகவானே, எங்களை நீ காப்பாயோ ஸ்ரீ கிருஷ்ணபகவானே.
என்னுடைய மரண காலத்திலும் உனை நினைத்திட அருள் புரிவாயே ஸ்ரீ கிருஷ்ணபகவானே, எனக்கு நீ அருள் புரிவாயே கிருஷ்ணபகவானே. உன்னை தவிர எனக்கு வேறு துணை ஏதும் கிடையாது ஸ்ரீ கிருஷ்ணபகவானே, ஸ்ரீ கிருஷ்ணபகவானே, உன்னையே நம்பி உன் பாத கமலத்தில் சரணடைந்தேனே ருஷ்ணபகவானே உன்னையே சரணடைந்தேனே ஸ்ரீ கிருஷ்ணபகவானே .
என்வுடல் ரோகத்தை போக்கி எனக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிப்பாயே கண்ணா, எனக்கு நல்ல தேக பலமலி ப்பாயே கண்ணா, என்னுடைய சோகத்தை போக்கி எனக்கு விவேகத்தை அளிப்பாயா கண்ணா, எனக்கு நல்ல ஆத்ம ஞானத்தை அளிப்பாயா கண்ணா. உனக்கு சூடான இனிப்பு பலகாரம் செய்து வைத்திருக்கிறேன் கண்ணா, என் இல்லம் வந்து அதை நீ உண்பாயா கண்ணா. உன் மலர் பாதம் என் வீட்டினில் நுழைய நான் உன்னை வேண்டுகிறேன்.
உனையே நினைத்து உருகுகின்றேனே உனை நினைத்து தினம் தினம் உருகுகின்றேனே கண்ணா. தூக்கத்திலும், துக்கத்திலும், ஏக்கத்திலும், கஷ்டத்திலும் என் வாழ்க்கை கழிகின்றதே கண்ணா எனக்கு நல்ல மனநிம்மதி தந்தருள்வாய் கண்ணா. எனக்கு நல்லதோர் வாழ்வை அளிப்பாய் நீயே! உந்தன் இதயத்தில் நிரந்தரமாக குடியிருக்க எனக்கு ஒரு இடம் வேண்டுகின்றேனே, உனை நான் பக்தியுடன் வேண்டுகின்றேனே!
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா மகாபிரபு
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்