ரேவதி, கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமரின் மனைவி, காகுஷ்மி என்பவரின் மகள். இவளைப் பற்றி மகாபாரதத்திலும், பகவத்கீதை புராணத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
குஸஸ்தாளி ராஜ்யத்தின் ஆட்சியாளரான காக்குடாமி என்பவரின் ஒரே மகள் ரேவதி. காக்குடாமி தனது மகளுக்கு உரிய ஒரு பொருத்தமான கணவனைக் கண்டுபிடிப்பதற்காக ப்ரஹ்மதேவனை தேடி ப்ரஹ்மலோகம் சென்றனர்.
ரேவதிக்கு தகுதியான கணவராக பலராமரை பரிந்துரை செய்துள்ளார் பிரம்மா.
காக்குடாமி மற்றும் ரேவதி ஆகியோர் பின்னர் பூமிக்கு திரும்பினர் . சிறிது காலம் கழித்து, பலராமரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்த பூமியில் பலராம அவதாரம் முடிந்தவுடன், ரேவதி அக்னியில் நுழைந்து முக்தி அடைந்தார்.
தெய்வீக அன்னையை வணங்கி அருள் புரிவோம்.
“ஓம் மாதா ரேவதி நமஹ”
“ஜெய் பலராம்”
“ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்