ஜாம்பவதி இவள் ஜாம்பவானின் அழகிய மகள். அரசன் ஜாம்பவான், பகவான் கிருஷ்ணரின் முக்கியத்துவத்தை அறிந்த பிறகு, ஜாம்பவதியை கிருஷ்ணணிற்கு மணமுடித்தார். அவரது பெயரும் பல்வேறு இந்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷ்யாமந்தக மணியின் பொருட்டு, கிருஷ்ணன் தன் சொந்த மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார், தன்னை நேர்மையான நபராக நிருபிக்க வேண்டும் என்பதற்காக, ஜாம்பவான் குகைக்கு சென்று, சண்டையிட்டு, அந்த நகையை எடுத்து வந்து,
சத்யஜித்திடம் கொடுக்க, பின்னர் தன் தவறை உணர்ந்து கவலைப்படும் சத்யஜித், தனது மகள் சத்யபாமாவை கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
ஜாம்பவதி உடன் திருமணம் மூலம், அவர்களுக்கு சம்பா என்ற ஒரு மகன் உண்டு. அவர் சிவனின் அம்சங்களைக் கொண்டுள்ளார். பத்து பிள்ளைகளின் தாய் ஜாம்பவதி. இவர்களில், சம்பா, பெற்றோருக்கு அன்பான மகனாக கருதப்படுகிறார். கிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு ஜாம்பவதி, கிருஷ்ணனின் மற்ற மனைவிகளுடன் சேர்ந்து தீயினுள் நுழைந்து முக்தி அடைந்தார். புண்ணிய தாயை வணங்கி அருள் பெறுவோம்.
“ஓம் மாதா ஜாம்பவதி நமஹா”
“ஜெய் கிருஷ்ணா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்