கயாது

கயாது, பக்த பிரஹலாத் என்பவரின் தாய், அசுரன் மன்னன் ஹிரண்யகசிபுவின் மனைவி. அவள் கிருத யுகத்தில் வாழ்ந்தாள். அவள் கணவன், பூமி, சொர்க்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு பல தொல்லைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவள் ஒரு அன்பான பெண்மணி, கடவுளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். கணவனின் மனதை மாற்ற அவளும் முயற்சித்தாள். ஆனால் அவள் தனது முயற்சிகளில் வெற்றி பெற முடியவில்லை.

ஆனால், கடவுள் பக்திமிக்க, உன்னதமான மகன் பக்த பிரஹலாத். இவளும் மகன் பிரஹலாதா இருவரும் திருமால் மீது தீவிர பக்தர்களானார்கள். நாரதரின் தெய்வீக வார்த்தைகளைக் கேட்டதும் தாயும் குழந்தையும் புனிதமாகி, பெரும் ஆன்மீக சக்திகளை அடைந்தனர்.

கர்ப்ப காலத்தில், கயாது எளிய உணவு மட்டுமே சாப்பிட்டு, அடிக்கடி நாராயண மந்திரத்தை, “ஓம் நமோ நாராயணன நமஹ” என்று கூறிவந்துள்ளார்.

அவள் கருவுற்றிருந்தபோது, இந்திரன் அவளின் கர்ப்பத்திலிருந்து குழந்தையைக் கொல்வதற்காக அவளைக் கடத்த முயன்றான். ஆனால் நாரதர் அவர்கள் முன் தோன்றி, பிறக்கும் சிறுவன் பெரிய விஷ்ணு பக்தனாக விளங்கி, இவ்வுலகில் அதிசயங்களைச் செய்வான் என்று கூறினார். பின்னர் தன் சொந்த மகளைப் போலவே அவளை பாவித்து, தன் ஆசிரமத்திற்கு அழைத்து சென்றார். தனது தவத்தை முடித்த பின்னர், ஹிரண்யகசிபு திரும்பிய போது, நாரதர் அவரிடம் கயாதுவை மரியாதையுடன் ஒப்படைத்தார்.

சில காலம் கழித்து, பக்திபிரஹலாத் பிறந்து, திருமாலின் பக்தனாக மாறினான். அவனுடைய தந்தை ஹிரண்யகசிபுவால் பல தொல்லைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. இறுதியாக, விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டார். அதன் பிறகு ப்ரஹலாதர் முழு உலகத்தின் அரசராக மாறி, தக்க முறையில் ஆட்சி புரிந்தார்.
தெய்வீகமான தாயையும், மகனையும் வணங்கி ஆசி காண்போம்.

“ஓம் ஸ்ரீ கயாது அன்னையே நமஹா”
“ஓம் ஸ்ரீ பக்த ப்ரஹலாத நமஹா”
“ஓம் நமோ நாராயணாய நமஹா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading