மாதா சீதா

சீதா மிகவும் புனிதமானவள். பூமிதேவியின் அவதாரமாகக் கருதப்படும் இவர், விதேஹாவின் அரசர் ஜனகா மற்றும் அவரது மனைவி ராணி சுனேனா ஆகியோரின் மகள்.

அவள் தங்கைகள் ஊர்மிளா, மாண்டவி , மற்றும் ஸ்ருஷ்டி. சீதா அர்ப்பணிப்பு, ஞானம், அறிவு, கருணை, சுய தியாகம், தைரியம், தூய்மை என்று நன்கு அறியப் பட்டவர்.

சீதா ராமனைத் மணந்து கொண்டாள். தண்டிகா வனத்தில், இலங்கையை சேர்ந்த மன்னன் ராவணனால் கடத்தப்பட்டார். போருக்குப் பிறகு சீதா, தன் கற்பு, தூய்மை ஆகியவற்றை நிரூபிப்பதற்காக நெருப்புக்குள் நுழைந்தாள்.

ராமரும், சீதாவும் அயோத்திக்குத் திரும்பினர். அங்கு அவர்கள் முடிசூட்டப்படுகிறார்கள். சில மாதங்களுக்குப் பிறகு சீதா கருவுற்றாள். பின்னர், வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் தஞ்சம் புகுகிறாள் . சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகன்களை ராமபிரானிடம் ஒப்படைத்துவிட்டு, பூமிக்குள் சென்று தங்கினார்.

புண்ணிய தாயை வணங்குவோம், அருள்பெற வேண்டுவோம்.

“ஓம் மாதா சீதா தேவியே நமஹா”
“ஜெய் ஸ்ரீ ராம்”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment