குரு ராகவேந்திர ஸ்வாமி பாடல்கள் | GURU RAGHAVENDRA SWAMY SONGS

raghavendra swamy

raghavendra swamy

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார்.
இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்.
உங்களின் அனைத்து கஷ்டங்களும் சீக்கிரம் தீர இந்த சுலோகம் துதியுங்கள்
குரு ராகவேந்திரர் ஸ்லோகம்
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே
குரு ராகவேந்திர ஸ்வாமி பாடல்கள்
நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம், நம் குருராஜர் ஸ்ரீ ராகவேந்திரர். அவரை நாம் தொழுதிடுவோமே புனித மந்த்ராலயத்தில். அஞ்ஞானத்தில் மூழ்கிய மானிடனே உடனே நீ விழித்தெழு , நம் குருராஜர் பாத கமலத்தில் நீ விழிந்தெழு.

வெற்றி நிச்சயம் நம் குருராஜரை தொழுவோருக்கு, உடம்பில், மனதில் சக்தி கிடைக்கும் நம் குருராஜரை நாம் வணங்கும் போது, குரு ராஜர் நம் அருகில் இருக்கும் போது, மிக்க பலம் நமக்கு கிடைத்திடுமே, ஆயிரம் யானை பலம் கிடைத்திடுமே நமக்கு கிடைத்திடுமே.

அற்புதம் அநேகம் நிகழ்த்தும் நம் குருராஜரை நீ தூய மனதுடன் வழிபாடு, அவரின் துணையின்றி நம்மால் வாழ இயலாது, நிச்சயமாக வாழவே முடியாது. ராம நாமம் சொல்லும் உனக்கு இனிப்பு பானம் படைத்திடுவோம் நல்ல சுவையுள்ள பானகத்தை உனக்கு அளித்திடுவோமே, நாங்கள் சந்தோஷமாக அளித்திடுவோமே, உந்தன் ஆராதனை நாளன்று உன்னை நான் ஆராதனை செய்வேனே.

மத்வ மத குருவே எங்களுக்கு நல்ல மாதவம் செய்த்திடுவாயே, எங்களுக்கு மகிமை மிக்க மந்த்ராக்ஷதை வழங்கிடுவாயே, மாஞ்சாலம்மன் புதல்வன் நீ தானே, மாஞ்சாலம்மனின் அனுக்கிரஹம் பெற்றவனும் நீ தானே.

உன்னால் தானே நான் ஆன்மிக சேவை செய்கின்றேன், உன்னால் தானே நான் சுவாசிக்கிறேன் நிம்மதியாக சுவாசிக்கிறேன், சங்குகர்ணர் நீ தானே, பக்த ப்ரஹலாதனும் நீ தானே, வ்யாஸராஜரும் நீ தானே, எங்கள் உன்னத குருவும் நீ தானே.

உன் சிஷ்யருக்கு அளித்தது போல உன் மிருத்திகையின் மூலம் எனக்கு ஒரு நல்ல மண வாழ்கை அளித்திட வேண்டுகின்றேனே, உன்னை நான் மனதார வேண்டுகின்றேனே, மன்னிக்க வேண்டுகின்றேன் என் பாவங்களை அழித்து என்னை நீ மன்னிக்க வேண்டுகின்றேன்.

நீ என்னை சபித்தாலும் நான் அதனை வரமாக கருதிடுவேன், நான் அதனை ஒப்பற்ற வரமாக கருதிடுவேன், நீ என் முன் பேயாக காட்சியளித்தாலும் நான் உன்னை தாயாக கருதி வழிபடுவேனே, நீ என்னை நினைக்காவிடினும் நான் உன்னை எப்போதும் நினைத்து கொண்டிருப்பேனே, என் கனவிலும் உன்னை மனதார வணங்கிக்கொண்டிருப்பேனே. உன்னை என்றும் நான் போற்றி புகழ்ந்திடுவேனே, என்றென்றும் போற்றி புகழ்ந்திடுவேனே.

எங்கும் எதிலும் உன்னை நான் காண்கின்றேனே, என் குருராஜரை நான் காண்கின்றேனே, அன்பாலே நீயும் எங்களை அணைத்துகொள்வாயோ எங்கள் குரு ராஜா எங்களை நீ அணைத்து கொள்வாயோ.

என்னுடைய ஒவ்வொரு மூச்சும் குரு ராகவேந்திரா என்று சொல்லி கொண்டிருக்குமே, என்னுடைய பேச்சு என்றும் நம் குருவை பற்றியே இருக்கும், என்னுடைய கண்கள் என் குருவை என்றும் பார்த்துக்கொண்டிருக்குமே மிக்க பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருக்குமே, என்னுடைய கால்கள் பிருந்தாவனம் நோக்கி சென்றிடுமே, நம் குருராஜர் பிருந்தாவனம் நோக்கி சென்றிடுமே, என்னுடைய கைகள் என்றும் நம் குரு ராகவேந்திரரை வணங்கிடுமே, என்னுடைய வாழ்கையை குருராஜர் சேவைக்கு நான் அர்ப்பணித்திடுவேனே.

சொர்க்க லோகம் எனக்கு வேண்டாம் உந்தன் பாத கமலத்தில் சரணடைவது ஒன்றே போதும், அது ஒன்றே போதும், ஹரி பக்தி கொண்டவனே, ஹரி பக்தியை புகட்டிடு, எனக்கு நீ காட்சி தந்திடு, எங்களுக்கு நீ முக்தி அளித்திடு, எங்கள் தீய குணத்தை நீ மாற்றிடு, குழந்தை ப்ரஹலாதனாக மாறி எந்தன் மடிமேல் ஏறி நீ விளையாடிடுவாயே, ஆனந்தமாக நீயும் விளையாடிடுவாயே.

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment