ரோகிணி நட்சத்திரம்

ரோகிணி, தட்சபிரஜாபதியின் மகளாக பிறந்தாள். 27 நட்சத்திரங்களில் ஒருத்தி. இந்த 27 நட்சத்திரங்களில் ரோகிணி நட்சத்திரம் வானத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பிரகாசமான தோற்றத்துடன், மிகுந்த சக்தியுடன் ஜொலிக்கிறாள். இவள் நமக்கு சகல நன்மைகளையும் கொடுப்பவள்.

இவருக்கு சந்திரனுடன் திருமணம் நடந்தது. 27 மனைவிகளில், ரோகிணி மீது அதிக அன்பும், பாசமும் செலுத்திய சந்திர ரனை, தன் அழகை இழக்குமாறு, தட்சன் சாபமிட்டார். ஆனால், சந்திரன் சிவனிடம் பிரார்த்தனை செய்த பின், தன் அழகை மீண்டும் அடைந்தார்.

ரோகிணி தாய் ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுகிறாள். அவளை வழிபடுவதன் மூலம், நமது வாழ்க்கை செழித்தோங்கும். நட்சத்திர உலகில் நிரந்தரமாக அவளுடன் வசிக்க வாய்ப்பு கிடைக்கும். அவளை வழிபடுவதன் மூலம், சந்திர பகவான் அருளால், நம் மனம் சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். இந்த உலகத்தில் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியும்.

நட்சத்திர தேவதையை வணங்கி ஆசி பெறுவோம்.

“ஓம் ஸ்ரீ ரோகிணி அன்னையே நமஹ ”
“ஓம் ஸ்ரீ சந்திர பகவானே நமஹ”
“ஓம் ஸ்ரீ தக்க்ஷ பிரஜாபதியே நமஹ”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading