ஊர்வசி விண்ணுலக நர்த்தகி. சொர்க்கத்தில் வசித்துவரும் தன் எஜமானனான இந்திரனால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளின்படி தன் கடமைகளை நிறைவேற்றுகிறார். அவரது பெயர் வேத நூல்களிலும் மகாபாரதத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்திரலோகத்தில் தெய்வீக நடனக் கலைஞர்களிடையே மிகவும் அழகான மங்கையாக கருதப்படுகிறார்.
அவள் எல்லா நல்ல குணங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாள். இந்திரனுக்கு மிகவும் கீழ்ப்படிந்தவள் என்று கருதப்படுகிறார். இந்திர லோகத்திற்கு வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து தருகிறாள். மும்மூர்த்திகளின் மூலம் தெய்வீக சக்திகளை பெற்றவள்.
ஒரு முறை அவள் ஸ்ரீ விபாஹக் என்ற பெரிய முனிவரிடம் ஐக்கியப்பட்டு ரிஷ்யஸ்ரிங்கரை பெற்றெடுத்தாள். புத பகவன் என்ற கிரகத்தின் மகனான புரூரஸமன்னனின் மனைவியாக அவள் ஆனாள். அவள் மிகவும் இளமையாகவும் கவர்ச்சிகரமாகவும் தெரிகிறாள், பிரகாசமான மற்றும் பளபளப்பான முகத்தையும் கொண்டுள்ளாள். நர, நாராயணர் ஆகியவர்களின் மூலம் இவள் படைக்கப்பட்டிருக்கிறாள் என்றும், பிற்காலத்தில் இந்திர சபைக்கு வந்தடைந்தாள் என்றும் நம்பப்படுகிறது. தெய்வீக நர்த்தகியை வணங்கி அருள் பெறுவோம்.
“ஓம் மாதா ஊர்வசீ தேவியே நமஹ”
“ஓம் ஸ்ரீ இந்திரன் பகவானே நமஹா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்