அம்மாளு அம்மாள் கும்பகோணத்தில் உள்ள மாத்வா பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்ப உறுப்பினர்கள் குரு ராகவேந்திரரின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர். இவள் ஒரு அதிசய குழந்தை, நல்ல குணங்களை தன்னகத்தே கொண்டவர், பாண்டூரங்கா, குரு ராகவேந்திரர் ஆகியோரின் பக்தர். தன் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட அவள், திருமணமான சில ஆண்டுகளுக்குள் கணவனை இழந்தாள்.
அவளது உறவினர்களால் சித்ரவதை செய்யப்பட்ட பிறகு, அவள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாள். ஆனால் விஷ்ணு பகவான் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து தடுத்து நிறுத்தினார். அவள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள். சிறிய அளவு உணவை சாப்பிட்டுக் கொண்டு தன் வாழ்க்கையை வாழ்ந்தாள். அவள் இறக்கும் வரை அவள் சொற்ப உணவைத்தான் எடுத்துக்கொண்டாள்.
பாண்டூரங்க பாடல்களை தனது வீட்டில் தொடர்ந்து பாடி வந்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி ஆகியவற்றை மிகுந்த பக்தியுடன் கொண்டாடியும், பல்வேறு உணவுப் பொருட்களை தயாரித்து, அதை இறைவனுக்கு வழங்கியும், பூஜை முடிந்ததும் பூஜையின் போது பங்கேற்றவர்களுக்கு அதை பகிர்ந்தளித்துள்ளாள். பல முறை பண்டரீபுரம் சென்று, பாண்டுரங்க சுவாமியை மிகுந்த பக்தியுடன் வழிபட்டாள்.
ஒரு நாளில் பல ஆயிரம் தடவை அவள் ராம நாமா ஜெபம் செய்தாள். காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் இவரை புகழ்ந்து பேசியுள்ளார். அவளும் தன் பக்தர்களின் வாழ்வில் பல அற்புதங்களை செய்து, அவர்களின் பாவங்களையும், நோய்களையும் அகற்றி, பக்திப் பாதையை அடையச் செய்தாள். அவள் ஒரு புனிதவாழ்க்கை வாழ்ந்து, கடவுளின் வழிபாட்டுக்கு தன்னை அர்ப்பணித்தாள்.
அவள் 2010-ல் இறந்துபோனாள். மேலும், ஸ்ரீமன் நாராயணின் புனித ஸ்தலமான வைகுண்ட தீர்த்தக் கட்டத்தை அடைந்தார்.
பக்தி மணம் வீசும் அன்னையை வணங்கி அருள் பெறுவோம்.
“ஓம் ஸ்ரீ அம்மாளு அன்னையே நமஹா”
“ஜெய் ஸ்ரீ ராம்”
“ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்