விநாயகர் பாடல்கள் | VINAYAKA SONGS in Tamil

விநாயகர் இந்து சமயக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும்  காணப்படுகிறது. இவர்பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. வைணவர்கள், விநாயகரைத் “தும்பிக்கை ஆழ்வார்” என்று அழைப்பார்கள்.

புராணங்களில் விநாயகர் சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு.
’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.
கிருத யுகம்
காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.
திரேதாயுகம்

அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்
துவாபரயுகம்

கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.
கலி யுகம்
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது.
விநாயகர் ஸ்லோகம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
விநாயகர் பாடல்கள்

விநாயகனே முழு முதற் கடவுளே, என் இஷ்ட தெய்வம் நீயே, உன்னை என்றும் நான் புகழ்ந்திடுவேனே, உன்னை நானும் போற்றி புகழ்ந்திடுவேனே.

நீ தானே என் தாய் தந்தை, நீ தானே எனது சகோதரன், நீ தானே எனது உற்ற நண்பன், உன்னை தவிர வேறு எந்த துணையும் எனக்கு வேண்டாமே, வேண்டாமே. உந்தன் நாமத்தை ஜெபிப்பவருக்கு வெற்றி நிச்சயமே கண்டிப்பாக அது நிச்சயமே.
விநாயக புராணத்தை படிப்போருக்கு பரம புண்ணியம் வந்து சேர்ந்திடுடமே, நிச்சயம் புண்ணியம் கிடைத்திடுமே, கிடைத்திடுமே. எந்த கஷ்டம் எனக்கு வந்தாலும் என் கணேசன் இருக்கையிலே எனக்கு அதுவே சந்தோஷமாக மாறிடுமே மாறிடுமே. நீ இல்லையென்றால் என் வாழ்வு தொல்லையே, மிக மிக தொல்லையே!
கஷ்டம் வந்தால் குரல் கொடு, நம் விநாயகன் இருக்கிறான் கவலைப்படாதே நீ எப்போதுமே கவலை பட வேண்டாமே வேண்டாமே. விநாயகன் நம்மோடு இருக்கும் போது நமக்கு நல்ல காலமே, மிக மிக நல்ல பொற்காலமே.
தொப்பை கடவுளே என் மன குப்பையை அகற்றுவாயே, உடனே நீயும் அகற்றிடுவாயே, அகற்றிடுவாயே, நான் தீயினுள் குதிக்க நேர்ந்தாலும், உன்னை நினைத்து சந்தோஷமாக குதித்திடுவேனே, மிக மிக சந்தோஷமாக குதித்திடுவேனே.
ஆசை ஆசை விநாயகனின் மேல் கொள்ளை ஆசை. விநாயக சதுர்த்தி அன்று அழகு, அழகு விநாயகர் பொம்மைகளை வாங்கி வணங்கிட ஆசை, விநாயகனின் துதிக்கையை பிடித்து விளையாடிட ஆசை, விநாயகனின் முன்பு தோப்புக்கரணம் போட்டிட ஆசை, விநாயகனுக்கு கொழுக்கட்டை ஊட்டி விட ஆசை, விநாயகனின் பாதத்தில் விழுந்து வணங்கிட ஆசை, விநாயகனின் முகத்தை நானும் பார்த்துக் கொண்டே இருக்க ஆசை, என் ஆசை தீர்வது எப்பொழுது, அது எப்பொழுது!

கண்ணான கண்ணே என்னை விட்டு செல்லாதே, உன்னை நானும் அன்புடன் தாலாட்டுவேனே, பார்வதி சிவனை காட்டிலும் உன் மீது அதிக அன்பு வைத்திருக்கின்றேனே, உன் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கின்றேனே.

இந்திர பதவி எனக்கு கிடைத்தாலும் எனக்கு வேண்டாமப்பா, அது எனக்கு வேண்டாமப்பா, உன் சுந்தர முகத்தை பார்த்தாலே எனக்கு போதுமப்பா, அதுவே எனக்கு போதுமப்பா.

விநாயகனை துதிப்போருக்கு விக்கினங்கள் தீர்ந்திடுமே, சகல விக்கினங்களையும் தீர்த்திடுவானே, நம் விநாயகன் தீர்த்திடுவானே, விநாயகர் அகவல் படிப்போருக்கு நல்ல தகவல் வந்து சேர்ந்திடுமே, நிச்சயமாக வந்து சேர்ந்திடுமே.

விநாயகனை நினைப்பதே சுகம் சுகம், விநாயகனை வணங்குவதே பரம சுகம், விநாயகனை நினைத்து கடலில் மூழ்கினாலும் அது எனக்கு கங்கை நதியாக தோன்றிடுமே, புனித கங்கை அன்னையின் மடியில் தவழும் பாக்கியமாக நான் நினைத்திடுவேனே, நான் நினைத்து உருகிடுவேனே, அப்பா நான் உருகிடுவேனே!

அப்பா அப்பா, பிள்ளையாரப்பா இவ்வுலகில் நான் பட்ட கஷ்டம் போதுமப்பா, உடனடியாக என்னை நீயும் உன் உலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டுமப்பா, வேண்டுமப்பா.

அன்பு தெய்வம் நீ, எந்தன் ஆசை தெய்வம் நீ, கண்ணே மணியே நீ தானே எந்தன் கற்கண்டு சுவையமுதே, முருகனின் அருமை அண்ணன் நீயல்லவோ, எந்தன் துயர் துடைக்க நீ வர மாட்டாயோ, உடனே நீ வர மாட்டாயோ.

ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment