முருகன் பாடல்கள், LORD MURUGAN SONGS

Lord Murugan

Lord Murugan

முருகன் சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார்.

இவர் கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார்.  முருகனுக்கு தெய்வானை, வள்ளி மனைவிகளாவர். முருகன் தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இவர் குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். கௌமாரம் எனும் தனி மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்து சமயத்துடன் இணைந்தது.

முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும்.
முருகன் பாடல்கள்
ஒரு முறை கூப்பிட்டால் கண்ணே முருகா நீ வருவாயா, உந்தன் தரிசனம் எனக்கு தினமும் தருவாயா, என்னை விட்டு நீ போகாமல் என் உடன் நீ வருவாயா வருவாயா.

அன்பின் வடிவமே அழகிய உருவமே, கண்மணியே, பொன்மணியே எந்தன் செல்வம் நீ அல்லவா, அறுமுகமே அதிஉன்னதனே, பேரின்பமே ராஜாதி ராஜனே, தேவாதி தேவனே, தெய்வத்தின் தெய்வம் நீயே நீ தானே நீ தானே.

உந்தன் கரங்களில் பெறும் விஷமும் எனக்கு அமிர்தமே, எந்தன் உயிர் நீ அல்லவா, போகாதே என்னை விட்டு நீ போகாதே , நீ சென்றால் நான் என் உயிரை விடுவேனே. உந்தன் அன்பு மட்டும் எனக்கு போதுமே வேறெதுவுமே எனக்கு வேண்டாமே வேண்டாமே.

உடல் சோர்வு இருப்பினும் உந்தன் நாமத்தை என்றும் ஜெபிப்பேனே, எந்தன் மூச்சு நின்றாலும் எந்தன் உள்ளம் உனை துதிக்குமே துதிக்குமே.
ராஜனாக இருப்பதை காட்டிலும் என்றென்றும் உந்தன் சேவகனாய் இருக்கவே வீரும்புகின்றேனே. எந்தன் ரத்தமனைத்தும் இழந்தாலும் சத்தமில்லாமல் உனை நினைத்து உருகுவேனே, உருகுவேனே.

உந்தன் சரணகீதம் பாடும் பொழுது மரணத்தை பற்றி எனக்கு கவலை இல்லையே , இல்லையே, எனக்கு வரும் துன்பம் எல்லாம் உனை நினைப்பதால் எனக்கு இன்பமே இன்பமே.

வேலை நித்தம் வணங்குவதே எந்தன் வேலை, வேறு வேலை எனக்கு வேண்டாமே, வேண்டாமே. சிற்றின்பம் எனக்கு என்றும் வேண்டாம் , உனை நினைக்கும் பேரின்பம் ஒன்றே எனக்கு போதுமே, போதுமே. உணவு எதுவும் உட்கொள்ள மாட்டேன் மாட்டேன் மாட்டேன் உந்தன் உணர்வு ஒன்றே எனக்கு போதுமே , போதுமே.

கந்த கடவுள் எனை காக்கும் கடவுள், கந்தகோட்டம் எனது இன்ப தோட்டம். ஆறுமுகனை தவிர எனக்கு ஆறுதல் சொல்வோர் யாரும் இல்லை, யாருமே இல்லையே, இல்லையே.

பார்வதி பரமேஸ்வர புத்திரன் நீயே, எந்தன் உற்ற மித்திரனும் நீயே, நீ தானே நீ தானே.

உனை நினைத்து நினைத்து பார்த்தேன், உனை ரசித்து ருசித்து மகிழ்ந்தேன், உன்னால் தானே உயிர் வாழ்கின்றேனே.

கட்டில் மெத்தை எனக்கு வேண்டாம் வேண்டாம், உந்தன் அருளால் கல்லிலும் முள்ளிலும் சுகமாய் உறங்குவேனே உறங்குவேனே.

கைலாசம் வைகுண்டம் வேண்டாம் வேண்டாம், கந்தன் உலகம் ஒன்றே எனக்கு போதுமே எனக்கு போதுமே.

எந்தன் எலும்பனைத்தும் உடைந்தாலும் உடைந்த எலும்பனைத்தும் உந்தன் புகழை பாடுமே பாடுமே.

அழகு பெண்கள் எனக்கு வேண்டாம், வேண்டாம், எந்தன் அழகேசன் அருள் ஒன்றே போதுமே, எனக்கு அது ஒன்றே போதுமே.

கொடும் நெருப்பும் உனை நினைத்தால் குளிர்ந்த நீராய் மாறுமே மாறுமே மாறுமே.

சேவல் கொடி கொண்டவனே, எனை என்றும் காவல் காத்திடுவாய் காத்திடுவாய்.

மயில் வாகனனே எனக்கு ஓயில் வடிவாய் காட்சியளிக்கின்றானே, காட்சியளிக்கின்றானே, காட்சியளிக்கின்றானே.

சொந்த பந்தம் எனை கைவிட்டாலும் முருகன் என்றும் எனை கைவிடான் எனை கைவிடான்.

முருகா முருகா முத்து குமரா கந்தா கடம்பா கதிர்வேலா எந்தன் உயிர் நீ அல்லவா நீ அல்லவா.

முருகா சரணம் சரணம் சரணம்
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment