இராமர் இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் அயோத்தியின் அரசர் தசரதனின் மகன், அவர் தம்பிகள், இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். இராமர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயணக் காவியத்தின் முக்கிய மாந்தர் இராமர் ஆவார். இராமரைக் கடவுளாக இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். கம்பரால் தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் கம்ப இராமாயணம் ஆகும். இது சிறந்ததோர் தமிழ் இலக்கியமாகும். கம்பரின் இராமாயணம் வால்மீகி இராமாயணத்திலிருந்து பல இடங்களில் வேறுபடுகிறது.
இந்த பாடல்கள் ஸ்ரீ ராமனின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. இப்பாடல்களை பாடி வந்தால் அனைத்து கடவுள்களும் உங்கள் வீடு தேடி வருவர். இதனால் மன அமைதியும், உங்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும் கிடைக்கும்.
பகவான் ராமர் பாடல்கள்
ராம நாமம் சொல்வோர்க்கு யம பயம் நீங்கி விடுமே, ராம நாமம் எழுதி கொண்டிரு, நான் இடைவிடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேனே, ராம நாமத்தை இடைவிடாமல் ஜெபித்து கொண்டிருக் கின்றேனே.
ஜெய ஜெய ராமா சீதா ராமா
ஸ்ரீ ராமன் ஒப்பற்ற அவதார புருஷன் அவன் தானே ஜெகத்ரட்சகன், ராமனை வந்தனை செய்வோரின் காலில் விழுந்து கும்பிடு, ராமனை நிந்தனை செய்வோரின் வாயில் ஒரு பிடி மண்ணை அள்ளி போட்டிடு.
ஜெய ஜெய ராமா பக்தவத்சல ராமா
ராமானு சொல்லிட்டாலே நம் அனுமானு அவ்விடம் வந்திடுவானே, ராமனே கதி என்றே அனுமானும் கிடப்பானே.
ஜெய ஜெய ராமா சௌந்தர்ய ராமா
ராமநாமம் நாம் தினமும் எழுதிட்டாலே நம் தலையெழுத்தை பிரமனும் மாற்றி விடுவானே.
ஜெய ஜெய ராமா தசரத ராமா ராமாயணத்தை நாமும் படித்து வந்தாலே சகல வேதங்களையும் படித்தது போலாகிவிடுமே.
ஜெய ஜெய ராமா கௌசல்ய ராமா
சுந்தரகாண்டம் படிப்போருக்கு சுந்தரமான வாழ்வு கிடைத்திடுமே.
ஜெய ஜெய ராமா பரப்ரஹ்ம ராமா
ராமர் கோவிலை தரிசித்தாலே காசி கயா சென்று வந்த புண்ணியம் கிடைத்திடுமே.
ஜெய ஜெய ராமா ரகுபதி ராமா
ராமரின் வனவாசத்தை நினைத்தாலே நம் உள்ளமெல்லாம் உருகிடுமே.
ஜெய ஜெய ராமா ஆரண்ய ராமா
ஸ்ரீ ராமரின் வில்லம்பு நம்மை பாதுகாத்திடுமே.
ஜெய ஜெய ராமா கோதண்ட ராமா
கல்யாண ராமனை நினைப்போருக்கு உடனடியாக கல்யாணம் ஆகிவிடுமே
ஜெய ஜெய ராமா கல்யாண ராமா
அநுமன் சாலிசாவை படிப்போர்க்கு ராமனின் அனுக்கிரஹம் கிடைத்திடுமே.
ஜெய ஜெய ராமா ஹனுமந்த ராமா
ராம ராம என்று சொல்வோர்க்கு காம எண்ணம் வந்திடாதே. ராம நாமம் சொல்வோர்க்கு வாழ்வில் எல்லா வளங்களும் வந்திடுமே, அவர்தம் வாழ்கை இனித்திடுமே.
ஜெய ஜெய ராமா சௌபாக்ய ராமா
சரயு ராமனை வணங்குவோர்க்கு அன்னை சரயுவின் ஆசி கிடைத்திடுமே
ஜெய ஜெய ராமா சரயு ராமா
மோகன ராமனை கும்பிடுவோர்க்கு மோகங்கள் விலகிடுமே, காம குரோத எண்ணங்கள் நீங்கிடுமே.
ஜெய ஜெய ராமா மோகன ராமா
ஆனந்த ராமனை வழிபடுவோர்க்கு உள்ளத்தில் ஆனந்தம் பெருகிடுமே.
ஜெய ஜெய ராமா ஆனந்த ராமா
சபரி ராமனை வணங்குவோர்க்கு அன்னை சபரியின் அருள் கிடைத்திடுமே.
ஜெய ஜெய ராமா சபரி ராமா
சுந்தர ராமனை வணங்குவோர்க்கு சுந்தரமான வாழ்வு கிடைத்திடுமே.
ஜெய ஜெய ராமா சுந்தர ராமா
ராஜாராமனை கும்பிடுவோர்க்கு ராஜ பதவி கிடைத்திடுமே, மகாராஜா பதவி கிடைத்திடுமே.
ஜெய ஜெய ராமா ராஜா ராமா
பட்டாபிராமனை கும்பிடுவோர் உயர் பட்டங்களை அடைந்திடுவோரே.
ஜெய ஜெய ராமா பட்டாபி ராமா
பாலராமனை கும்பிடுவோர்க்கு சகல பாவங்கள் விலகிடுமே
ஜெய ஜெய ராமா பால ராமா
ஜெய் ஸ்ரீராம்
எழுதியவர்
ரா.ஹரிஷங்கர்