அம்மன் எனப்படும் மாரியம்மன் ஒரு இந்து சமய கடவுள் ஆவார். பார்வதியின் அவதாரமான இவர் கிராமப்புறங்களில், வழிபடப்படுபவர். கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி(மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும்.
அம்மன் பாடல்கள்
அம்மனுக்கு பொங்கல் வைக்க போறேனே, எந்தன் அன்னையும் அவளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய போறேனே, அங்காளம்மா என்னை பெற்ற தாய் நீ தானம்மா, சுட சுட கூழை, ருசியுடன் உனக்கு படைத்திடுவேனே. அம்மா அம்மா அமுத பூரணி அம்மா, உனக்கு சுவையுள்ள அன்னம் படைத்திடுவேனே.
அம்மா அம்மா கருமாரி அம்மா, எங்களுக்கு அருள் புரிய ஓடி வாடியம்மா, பட்டு புடவை உனக்கு வாங்கி வைத்திருக்கிறேன் அதை நீ அணிந்துகொள்ளம்மா, தங்க சங்கிலியிலே தாலி சரடு சேர்த்து உனக்கு காணிக்கை அளிப்பேன் அம்மா, எனக்கு ஒரு நல்ல மண வாழ்கை அமைத்து கொடம்மா.
ஆத்தா உன் மடி மீது தலை வைத்து தினமும் நான் தூங்கணும், உன் அழகை பார்த்து பார்த்து தினந்தோறும் நான் ரசிக்க வேண்டுமே, நித்தம் நித்தம் என் வாழ்வில் போராட்டம் தாம்மா, என் வேதனையெல்லாம் போக்குவாயம்மா.
கங்கையம்மன் நீ தானே அம்மா, எந்தன் குல தெய்வம் ஈரோட்டில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் தாயே, எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைத்து தருவாயம்மா, நான் செய்யும் தொழிலில் லாபம் கிடைத்திட வழி புரிவாயம்மா, கண்ணகி நீயே, திரௌபதி நீயே, வாசுகி தாயும் நீ தானம்மா.
என்னுடைய காவல் தெய்வம் நீ தானம்மா, என்னுடைய வழி துணையும் நீ தானம்மா, உந்தன் புகழை இவ்உலங்கெங்கும் பரப்பிடுவேனே, அழகிய அன்னையே, மைவிழியாளே, சுடர்கொடியாளே, என்னுடைய அழகு தேவதை நீயே, உன்னை தவிர வேறு யாரையும் நான் நினைக்க மாட்டேன், நினைக்கவே மாட்டேன், காமாட்சி , மீனாஷி , கமலாக்ஷி எங்கேயும் உந்தன் ஆட்சி.
போகாதே என்னை விட்டு நீ போகாதே, என்னோடு நீ இருந்தால் எனக்கு எல்லாம் வெற்றியே, நீ தானே என்றும் நிரந்தரம், எனக்கு துர்மரணம் நேராமல் எனக்கு நற்கதியளிப்பாயம்மா, உனக்கு நல்ல பட்டாடை உடுத்தி நல்ல அலங்காரம் செய்து பூப்பல்லக்கில் உன்னை நான் ஏற்றி வருவேன், எந்தன் அங்கமனைத்தும் உந்தன் புகழினை பாடுமே, சர்வ அலங்காரபூஷணி நீயே, நித்திய கல்யாணி அம்மனும் நீயே, எனக்கு ஓரு நல்ல வழி காட்டுவாயம்மா.
அம்மா உந்தன் பிரசாதம் எனக்கு தேவாமிர்தம், நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேனே அம்மா, என்றென்றும் உந்தன் நினைவு தான் எனக்கு, நீ என்னோட பேசாம போனாலும் நான் உன்னுடன் பேசி கொண்டிருப்பேனே, முருகினியும் நீதானே அழகு மகேஸ்வரியும் நீதானே அம்மா. அம்மா நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்கமாட்டேன் அம்மா, எந்தன் அழகு அன்னையே உந்தன் அழகை ரசிப்பேனே, கோடி சூரிய ஜோதி வடிவினவளே, என்றென்றும் உன்னை என் மனத்தில் வைத்திருக்கின்றேனே.
கண்ணே மணியே கண்ணின் மணியே தேவாதி தேவதையே நீதானே எந்தன் உயிரல்லவோ, நீ தானே எந்தன் செயல் அல்லவோ, ஓடி வாயம்மா என்னுடன் ஓடி விளையாடம்மா, உனக்கு நானும் திருஷ்டி கழிக்க வேண்டும் அம்மா, நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு வாழ வேண்டும் அம்மா.
ஓம் சக்தி பராசக்தி
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்