மாணிக்கவாசகர் (Manickavasagar) மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாரும்,திருவெம்பாவை யுமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். இவர் பாடிய பாடல்கள் “திருவாசகம்” என அழைக்கப்படுகின்றன. திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சிவனடி சேர்ந்தார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள் என்ற பெயர்களும் உண்டு. வரலாறு “திருவாதவூரார் பாண்டிய […]