விருச்சிக ராசி பலன் 2023 (Rasi Palan 2023) ஆண்டின் விருச்சிக ராசியின் படி, புத்தாண்டு 2023-ம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். ஏனெனில் நீங்கள் தைரியமும் வலிமையும் நிறைந்தவராக இருப்பீர்கள். வியாபாரத்திலும் ரிஸ்க் எடுத்து தொழிலை வளர்ப்பீர்கள்.
மூன்றாம் வீட்டில் சனி பகவான் இருப்பதும் ஐந்தாம் வீட்டில் குரு இருப்பதும் தனிப்பட்ட முயற்சிகள் மூலம் உங்களுக்கு சிறப்பான நிதி பலன்களைத் தரும். கல்வித் துறையிலும் மாணவர் என்ற நல்ல அடையாளத்தை உருவாக்க முடியும். உங்கள் மனம் எளிதில் கல்வியில் நாட்டம் கொள்ளும். உங்கள் பிள்ளைகளிடமிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் குழந்தை முன்னேறும்.
உங்கள் காதல் உறவு வலுவடையும் மற்றும் உங்கள் அன்புக்குரியவருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். எனவே, ஆண்டின் முதல் பாதி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஜனவரி 17-ம் தேதி சனி நான்காம் வீட்டிற்கு வந்த பிறகு இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
ஏப்ரல் 22 அன்று, குரு பகவான் உங்கள் ஆறாவது வீட்டில் ராகு மற்றும் சூரியனுடன் இணைகிறார். இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். வயிற்று நோய், கல்லீரல், வயிறு தொடர்பான பிரச்சனைகள், உடல் பருமன், கொழுப்பு பிரச்சனைகள், அதிகரித்த கொலஸ்ட்ரால் மற்றும் எந்த விதமான சுரப்பி விரிவாக்கம் போன்ற பிரச்சனைகளும் உங்களை தொந்தரவு செய்யலாம்.
அக்டோபர் 30க்குப் பிறகு ராசி மாறி ஐந்தாம் வீட்டிற்கு ராகு மாறுவதும் மற்றும் குரு ஆறாம் வீட்டில் நீடிப்பதும் உங்களுக்கு ஓரளவு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன் வெளியூர் பயண வாய்ப்புகளும் உண்டாகும்.
தொகுத்து வழங்கியவர்
ரா. ஹரிஷங்கர்