மா பத்மாவதி
அலமேலு மங்கா என்று அழைக்கப்படும் பத்மாவதி, ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் துணைவியும், மாதா லட்சுமி தேவியின் அவதாரமும் ஆவார். திருப்பதி அருகே உள்ள திருச்சானூரில் பிரசித்தி பெற்ற பத்மாவதி அம்மன் கோவில் உள்ளது. திருமலைக்கு செல்ல விரும்புவோர் முதலில் திருச்சானூர் பத்மாவதி தாயாரின் சந்நிதிக்குச் சென்று வழிபட்டுவிட்டு, பின்னர்தான் திருமலை வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
பத்மாவதி தனது உண்மையான பக்தர்கள் மீது தனது அருளைப் பொழிந்து, அவர்களுக்கு அளப்பரிய நன்மைகளை அளித்து, அவர்களின் வாழ்க்கையில் அனைத்து வகையான வளங்களையும் ஆசீர்வதிப்பவள். பல ஆழ்வார்கள் இவளின் அழகையும் பெருமையையும் பாராட்டி பல பாடல்களை இயற்றிப் பாடியுள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரருக்கு மிகவும் பிடித்த துணைவியான இவர், தனது பக்தர்களை அவர்களின் வாழ்க்கையில் அனைத்து வகையான பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாக்கிறார். புராணக்கதைகளின்படி, இப்போதும், ஒவ்வொரு இரவும், திருமலை வெங்கடேஸ்வரா திருச்சானூர் வந்து, தனது துணைவியார் பத்மாவதியுடன் சிறிது நேரம் தங்கியிருந்து, பின்னர் மீண்டும் திருமலைக்கு திரும்புகிறார் என்று நம்பப்படுகிறது.
பத்மாவதியின் தீவிர பக்தரான அன்னமாச்சாரியார், பத்மாவதியைப் புகழ்ந்து பல பாடல்களைப் பாடினார். பல முறை அவள் தெய்வீகத் தோற்றத்தைப் கண்டு மகழ்ந்து அவளிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றார்.
“ஓம்”
எழுதியவர்
ரா.ஹரிசங்கர்
Mobile No.9940172897