புத்தர், தனது கடந்த பிறவிகளில், விலங்குகள், மகான், அரசன், தத்துவ ஞானி போன்ற பல பிறவிகள் எடுத்திருக்கிறார். புத்தர் பெருமான் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். அவர் ஒரு பெரிய மகான். புத்த மதப் பிரிவை உருவாக்கினார். இன்று ஆசிய நாடுகளில் ஏராளமான மக்கள் புத்த மதத்தினரைப் பின்பற்றி, புத்தரின் போதனைகளின்படி வாழ்கின்றனர்.
புத்தர் தனது சொற்பொழிவில் பல ஆயிரம் ஆண்டுகள் பல அவதாரங்கள் எடுத்து, இறுதியில் புத்தர் பிறப்பை மேற்கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார். எல்லா தெய்வ அவதாரங்களும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக படைக்கப்பட்டன. அவை போதிசத்வர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். எல்லா அவதாரங்களும் மிகவும் புனிதமானவை களாக கருதப்படுகின்றன.
ஜாதகக் கதைகளில் உள்ள போதிசத்வர்களைப் பற்றி பல கதைகள் உள்ளன. எல்லா கதைகளும் போதிசத்வர்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மனித குலத்திற்கு எப்படி உதவினார்கள் என்பதையும் சொல்லுகிறார்கள்.
மகா போதிசத்வரை வணங்கி அருள் பெறுவோம்.
“ஜெய் புத்தா நமஹா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்