புண்ணக்கீசர்

பல நூற்றாண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில் புண்ணக்கீசர் என்று அழைக்கப்பட்ட ஒரு சித்தர் வாழ்ந்து வந்தார். அவர் தனது தாயாருடன், தனது இளைய வயதிலிருந்தே கிருஷ்ண சேவை செய்து வந்தார். அவர் அவளுடன் சேர்ந்து கிருஷ்ணர் கோவிலுக்கு செல்வார்.

மகா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஆர்வத்துடன் வணங்குவார். அவரது தாயார் இறந்த பிறகு, தனது வீட்டிலிருந்து வெளியேறி அத்தி மரத்தின் துவாரத்தின் உள்ளே அமர்ந்து பல நாட்கள் கிருஷ்ணர் மீது தீவிர தியானம் செய்தார். சிவபெருமானையும் தரிசித்தவர்.

தியானத்தை முடித்த பிறகு, “கடவுளே, கிருஷ்ணர், நான் மிகவும் பசியோடு உணர்கிறேன், எனக்கு உணவு கொடுங்கள்” என்று அவர் அழ, உடனே பகவான் கிருஷ்ணர், ஒரு மாடுமேய்ப்பவனாக மாறி, பழங்களையும், பாலையும், பாசமான முறையில் அவருக்கு வழங்குவார்.

புனித உணவை எடுத்துக் கொண்ட பிறகு சித்தர் மீண்டும் தனது தியானத்தை செய்யத் துவங்குவார். அதன் மூலம் அவருக்கு பெரும் சக்திகள் கிடைத்தன. காலப்போக்கில் மக்கள் அவரை வணங்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய கவலைகளை அவர்கள் சொல்ல ஆரம்பித்தனர். சித்தர் பல்வேறு நோய்களை மூலிகைகளின் உதவியால் குணப்படுத்தியுள்ளார்.

“ஜெய் கிருஷ்ணா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment