பகவான் நரசிம்மர் பாடல்கள், LORD NARASIMHA SONGS IN TAMIL

நரசிம்ம அவதாரம், விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும், மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.

தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது ஐதிகம். பல புராண நூல்களில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
நரசிம்ம மந்திரம்
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்!!
பகவான் நரசிம்மர் பாடல்கள்

ஹே என் அழகு நரஸிம்ஹா, நீ அழகிய பாற்கடலில் வீற்றிருக்கிறாய், அழகான அணிகலன்களை உன் உடம்பில் அணிந்திருக்கிறாய், ஆதிசேடன் படுக்கையில் படுத்திருக்கிறாய், உன்னை சகல மக்களும் தேவர்களும் தெய்வங்களும் போற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள், தயவு கூர்ந்து என்னை உன்னிடத்திற்கு கூட்டி செல்வாயாக, என் அருமை ப்ரஹலாதனின் இஷ்ட தெய்வமான நரஸிம்ஹா, என்னை உன்னிடத்திற்கு கூட்டி செல்வாயாக.

ஹே நரஸிம்ஹா, யுகங்களை தாண்டியும் உந்தன் புகழ் பரவியிருக்கிறதே, உன்னை தவிர என்னை காப்பவன் வேறு யாரும் இல்லையே, எனக்கு இல்லையே, மங்களபுரி நமசிம்ஹா, என் வாழ்வில் மங்கலங்களை தந்திடுவாய். சோளிங்கர் நரஸிம்ஹா என் சோகத்தை தீர்த்திடுவாயே, சிங்கப்பெருமாள் கோவில் நரஸிம்ஹா, சீக்கிரமாக வந்திடுவாயே, அகோபில நரஸிம்ஹா நல்ல பலத்தை எனக்கு தந்திடுவாயே, வராக நரஸிம்ஹா சகல வரங்களையும் தந்திடுவாயே, ஆபத்சகாய நரஸிம்ஹா ஆபத்திலிருந்து என்னை காப்பாயே, வீர நரஸிம்ஹா, வீரனாக என்னை மாற்றிடுவாயே.குபேர நரஸிம்ஹா குபேர சம்பத்தை எனக்கு அளித்திடுவாயே.

விஸ்வரூப நரஸிம்ஹா, உன் விஸ்வரூபத்தை எனக்கு நீ காட்டுவாயா, ஸ்வர்ண நரஸிம்ஹா என் சொப்பனத்தில் நீ வருவாயா, வித்யா நரஸிம்ஹா, சகல வித்தைகளையும் எனக்கு நீ கற்று தர வேண்டும், சந்தான நரஸிம்ஹா எனக்கு சந்தான பேறு அளிக்க வேண்டும், அமுத நரஸிம்ஹா எனக்கு நீ அமுதம் அளிக்க வேண்டும்.

சிம்ம அவதாரம் எடுத்தானே, நரசிம்ம அவதாரம் எடுத்தானே, அவனின் மகிமையை என்னவென்று சொல்வது, அவனின் பரம பக்தனான ப்ரஹலாதனை தவிர அவனின் மகிமையை யாராலும் சொல்ல முடியாது, சொல்லவே முடியாது, நரசிம்மன் தானே என் உயிர் தெய்வம், நரசிம்மனே என் இஷ்ட தெய்வம் நரசிம்மனே என் குல தெய்வம், நரசிம்மனே என் ஆசான், நரசிம்மனே என் உற்ற நண்பன், நரசிம்மனே என் தாய் தந்தை, நரசிம்மனே எனது இதயம், நரசிம்மனே எனது கோவில்.

ஓ மனமே, நரசிம்மனை தவிர வேற யாரையும் நினைக்காதே, ஓ கண்களே, எனது நரசிம்மனை தவிர வேற யாரையும் பார்க்காதே, ஓ உதடுகளே, நரசிம்மன் பெயரை தவிர வேற எதையும் உச்சரிக்காதே, ஓ கைகளே நரசிம்மனை தவிர வேற யாரையும் சேவிக்காதே, ஓ கால்களே, நரசிம்மன் கோவிலை தவிர வேற எங்கும் போகாதே, ஓ எனது வாயே, நரசிம்மன் பிரசாதத்தை தவிர நீ வேற எதையும் உட்கொள்ளாதே, நரசிம்மன் மந்திரத்தை தவிர வேற எதையும் நீ உச்சரிக்காதே, ஓ எனது செவிகளே, நரசிம்மனின் பாடல்களை தவிர வேறு எதுவும் கேட்டிடாதே, ஓ சிரசே, நரசிம்மனை தவிர வேறு யாருக்கும் நீ தலை வணங்காதே.

ஓ விரல்களே, நரசிம்மனை நினைத்து நீ நாதஸ்வரம் வாசித்திடு, ஓ கழுத்தே, நரசிம்மனின் ஜெப மாலையை நீ சூட்டி கொள்ளு, நம் ஒவ்வொரு மூச்சும் நரஸிம்ஹா என்றே ஒலிக்கட்டுமே, நவ நரஸிம்ஹா என்றே ஒலிக்கட்டுமே, எங்கும் நரஸிம்ஹா, எதிலும் நரஸிம்ஹா, எல்லாமுமே நரஸிம்ஹா, உன்னிடத்திலும் நரஸிம்ஹா, என்னிடத்திலும் ஸ்ரீ நரஸிம்ஹா.

ஜெய ஜெய ஸ்ரீ நரஸிம்ஹா
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment