பகவான் அனுமான் பாடல்கள் (LORD HANUMAN SONGS IN TAMIL)..
அனுமன் என்பவர் இராமனின் பக்தனும், இந்துக்களின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன், சுந்தரன், சௌந்தர்யன் அழகன் போன்ற பெயர்களும் இருக்கின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). வாயு அனுமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனைச் சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு.
வைணவக் கோயில்களில் அனுமாருக்குத் தனி சன்னிதி உண்டு. அனுமானை வைணவர்கள் திருமாலின் சிறிய திருவடி என்று போற்றுகின்றனர்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
‘ஓம் ஆஞ்சநேயா வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் பிரசோதயாத்’
ஹனும நாமாவளி
ஓம் ஶ்ரீ ஆஞ்ஜனேயாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் ஹனுமதே நம:
ஓம் மாருதாத்மஜாய நம:
ஓம் தத்த்வஜ்ஞானதாய நம:
ஓம் ஸீதாதேயகாய நம:
ஓம் அஶோகவனிகாச்ரே நம:
ஓம் ஸர்வமாயாவினாய நம:
ஓம் ஸர்வபமோக்த்ரே நம:
ஓம் ரக்ஷோவித்காய நம:
ஓம் பரவித்யாபரீஹாராய நம:
ஓம் பரஶௌர்யவினாஶனாய நம:
ஓம் பரமன்த்ரனிராகர்த்ரே நம:
ஓம் பரயன்த்ரப்ரபேதகாய நம:
ஓம் ஸர்வக்ரஹவினாஶினே நம:
ஓம் பீமஸேனஸஹாயக்ருதே நம:
ஓம் ஸர்வதுகஹராய நம:
ஓம் ஸர்வலோகசாரிணே நம:
ஓம் மனோஜவாய நம:
ஓம் பாரிஜாதத்ஸ்தாய நம:
ஓம் ஸர்வமன்த்ரபவதே நம:
ஓம் ஸர்வதன்த்ரஸ்வரூபிணே நம:
ஓம் ஸர்வயன்த்ராத்மகாய நம:
ஓம் கபீஶ்வராய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் ஸர்வரோகஹராய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பலஸித்திகராய நம:
ஓம் ஸர்வவித்யகாய நம:
ஓம் கபிஸேனானாயகாய நம:
ஓம் பவிஷ்யச்சநாய நம:
ஓம் குமாரப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ரத்னகுண்டலதீப்திமதே நம:
ஓம் ஸஞ்சலத்மானஶிகோலாய நம:
ஓம் கவஜ்ஞாய நம:
ஓம் மஹாபலபராக்ரமாய நம:
ஓம் காராக்த்ரே நம:
ஓம் ஶ்ருங்கலாபசகாய நம:
ஓம் ஸாகரோத்தாரகாய நம:
ஓம் ப்ராஜ்ஞாய நம:
ஓம் ராமதூதாய நம:
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் வானராய நம:
ஓம் கேஸரீஸுதாய நம:
ஓம் ஸீதாஶோகனிவாரகாய நம:
ஓம் அஞ்ஜனாகர்பஸம்பூதாய நம:
ஓம் பாநாய நம:
ஓம் விபீஷணப்ரியகராய நம:
ஓம் ததகாய நம:
ஓம் லக்ஷ்மணத்ரே நம:
ஓம் வஜ்ரகாயாய நம:
ஓம் மஹாத்யுதயே நம:
ஓம் சிரஞ்ஜீவினே நம:
ஓம் ராமபக்தாய நம:
ஓம் தைதகாய நம:
ஓம் அக்ஷஹன்த்ரே நம:
ஓம் காஞ்சனாபாய நம:
ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் மஹாதபஸே நம:
ஓம் லங்கிணீபஞ்ஜனாய நம:
ஓம் ஶ்ரீமதே நம:
ஓம் ஸிம்ஹிகாப்ராணபஞ்ஜனாய நம:
ஓம் கன்தமாதனஶைலஸ்தாய நம:
ஓம் லங்காபுரவிதாஹகாய நம:
ஓம் ஸுக்ரீவஸசிவாய நம:
ஓம் தீராய நம:
ஓம் ஶூராய நம:
ஓம் தையகுலான்தகாய நம:
ஓம் ஸுரார்சிதாய நம:
ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் ராமசூடாமணிப்ரதாய நம:
ஓம் காமரூபிணே நம:
ஓம் பிங்கல்தாக்ஷாய நம:
ஓம் வார்திமைனாகபூஜிதாய நம:
ஓம் கபமண்டலாய நம:
ஓம் விஜிதேன்த்ரியாய நம:
ஓம் ராமஸுக்ரீவஸன்தாத்ரே நம:
ஓம் மஹிராவணமர்தனாய நம:
ஓம் ஸ்படிகாபாய நம:
ஓம் வாகதீஶாய நம:
ஓம் பண்டிதாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் தீனபன்தவே நம:
ஓம் மஹாத்மனே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸஞ்ஜீவனநகரே நம:
ஓம் ஶுசயே நம:
ஓம் வாக்மினே நம:
ஓம் த்ருடவ்ரதாய நம:
ஓம் காலனேமிப்ரமதனாய நம:
ஓம் ஹரிமர்கடமர்கடாய நம:
ஓம் தான்தாய நம:
ஓம் ஶான்தாய நம:
ஓம் ப்ரஸன்னாத்மனே நம:
ஓம் ஶதகண்டமதாபஹ்ருதே நம:
ஓம் யோகினே நம:
ஓம் ராமகதாலோலாய நம:
ஓம் ஸீதான்வேஷணபண்டிதாய நம:
ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம:
ஓம் வஜ்ரனகாய நம:
ஓம் ருத்ரவீர்யஸமுத்பவாய நம:
ஓம் இன்த்வாரகாய நம:
ஓம் பார்தஸம்வாஸினே நம:
ஓம் ஶரபஞ்ஜரகாய நம:
ஓம் தஶபாஹவே நம:
ஓம் லோகபூஜ்யாய நம:
ஓம் ஜாம்பவத்ப்ரீதிவர்தனாய நம:
ஓம் ஸீதாஶ்ரீராமபாதஸேவாய நம:
பகவான் அனுமான் பாடல்கள்
ராமனை நாமும் பாடிட, பாடிட, ஹனுமன் நம்மிடம் வந்திடுவானே, ராமா என்றே ஒருதடவை கூறிவிட்டாலே, ஹனுமன் மனம் குளிர்ந்திடுவானே, ராமநாமத்தை நாமும் தினந்தோறும் எழுதி வர, எழுதி வர அனுமனும் நம் தலையெழுத்தை மாற்றி விடுவானே, ராமனை நாமும் வழிபட, வழிபட நாம் வாழ்வதற்கு ஒரு நல்ல வழிகாட்டிடுவானே, சுந்தரஹநுமானை நாமும் வணங்கிட, வணங்கிட, சுந்தர வடிவம் நமக்கு கிடைத்திடுமே, ஐஸ்வர்ய ஹநுமானை நாமும் வணங்கிட, வணங்கிட, சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைத்திடுமே, ஜெயஹநுமானை நாமும் வணங்கிட, வணங்கிட நம் வாழ்வில் நாமும் ஜெயித்து கொண்டே இருப்போமே, பஞ்சமுகஹநுமானை நாமும் வணங்கி வர, வணங்கி வர, நாம் எதற்கும் பஞ்சமில்லாமல் வாழ்வோமே, வைத்திய ஹனுமனை வணங்கி வர, வணங்கி வர, நோய் நீங்கி நாமும் சுகப்படுவோமே, வித்யாஹநுமானை நாமும் வணங்கி வர, வணங்கி வர, சகல வித்தைகளும் நாம் கைவரப்பெறுவோமே, காரியசித்தி ஹனுமனை நாமும் வணங்கிவர, வணங்கிவர, திருமணயோகம் நமக்கு வந்திடுமே, சக்தி ஹனுமனை வணங்கி வர, வணங்கி வர, அஷ்டமாசித்திகளும் நாம் பெற்றிடுவோமே.
வாயுவின் மைந்தன் நம் வாயினை காக்க, அஞ்சனை மைந்தன் நம் அச்சத்தை போக்கிட, பவித்ரஹனுமன் பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் நீக்கிட, சிரஞ்சீவி ஹனுமன் நம் சிரத்தினை காக்க, புஜபலம் மிக்கவன் நம் புஜங்களை காக்க, ராமபக்த ஹனுமன் நம் பற்களை காக்க, வீரஹனுமன் நம் விரல்களை காக்க, கேசரி புதல்வன் நம் கேசத்தை காக்க, வஜ்ரதேகம் கொண்டவன் நம் வயிற்றினை காக்க, களங்கமில்லாதவன் நம் கண்களை காக்க, அன்பு ஆஞ்சநேயன் நம் அங்கமெல்லாம் காக்க.
ராமனின் பரம பக்தன் யாரு?
அவர் தானே நம்ம ராமசேவக ஹனுமாரு.
ராமா ராமா என்றே எந்நேரமும் உச்சரிப்பவரு யாரு?
அவர் தானே நம்ம ராமாஞ்சிநேயரு.
அளவற்ற பலசாலி யாரு?
அவர் தானே நம்ம பலஹனுமாரு.
ஒப்பற்ற ப்ரஹ்மச்சாரி யாரு?
அவர் தானே நம்ம ப்ரஹ்மச்சாரி ஹனுமாரு.
லங்கையை எரித்தது யாரு?
அவர் தானே நம்ம லங்காதகன ஹனுமாரு.
நம் வாழ்வில் அற்புதங்கள் புரிபவர் யாரு?
அவர் தானே நம்ம அற்புதஹனுமாரு.
ஸ்ரீராமசேவையில் எந்நேரமும் ஈடுபடுபவரு யாரு?
அவர் தானே நம்ம ஸ்ரீராமபக்த ஹனுமாரு.
விஸ்வரூபத்தை காண்பித்தவரு யாரு?
அவர் தானே நம்ம விஸ்வரூபஹனுமாரு.
சிவனின் அம்சம் கொண்டவரு யாரு?
அவர் தானே நம்ம சிவஹனுமாரு.
சீதா அன்னையின் பிரிய மைந்தன் யாரு?
அவர் தானே நம்ம சீதாபிரியஹனுமாரு.
ராமனின் அடிமை என்று சொல்லிக்கொள்பவரு யாரு?
அவர் தானே நம்ம ராம ஸ்ரீராம பைத்திய(ஒப்பற்ற பக்தி) ஹனுமாரு.
பெண்களை அன்னையாக மதிப்பவரு யாரு?
அவர் தானே நம்ம உத்தம ஹனுமாரு.
தன் மூச்சிலும் பேச்சிலும் ராமா ராமா என்றே அழைப்பவர் யாரு?
அவர் தானே நம்ம பரம பாகவத ஹனுமாரு.
ஹனுமனை நாமும் பணிந்திடுவோமே, ராமனை நினைத்தே, நினைத்தே நித்தமும் நாமும் மகிழ்ந்திடுவோமே.
ஜெய் ஸ்ரீராமபக்த ஹனுமான் நமோ நமஹ
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்