ஐயப்பன் பாடல்கள் (LORD AYYAPPAN SONGS IN TAMIL)

சுவாமி ஐயப்பன்   வழிபாடு தென்னிந்தியாவில் முதன்மை பெறுகிறது. ஐயப்பனின் முக்கிய தலமாக சபரிமலை விளங்குகிறது. ஐயப்பன் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் மகனாக கருதப்படுகிறார்.

பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனைக் கண்டெடுத்தார். மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்குத் தன் மகன் மீது பிரியம் உண்டானது.

ஆனால் பந்தள இளவரசனாக மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனின் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார், புலிப்பாலை கொண்டு வந்தார். பின்னர் சபரிமலையில் கடவுளாக எழுந்தருளினார்.

ஸ்ரீ ஐயப்பன் கவசம்
அரிஹ்ர புத்ரனை, ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரிகிரிசினை, சாந்த சொருபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே.
ஐயப்ப தேவன் கவசமிதனை
அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வரும்.
ஐயப்பன் பாடல்கள்
அய்யப்ப ஸ்வாமி எனக்கு அருள் புரிய நீ ஓடி வா ஸ்வாமி, கார்த்திகை மாதம் விரதமிருந்து உன்னை தரிசிப்போருக்கு நீ காத்து ரட்சிக்க வேண்டும் ஸ்வாமி, மணிகண்டா உன்னை தினந்தோறும் துதிப்போருக்கு சகல சௌபாக்கியங்களையும் தந்திடுவாயே, பரவசம் கொண்டேன் என் அழகு ஐயப்பனை கண்டு, அரவணை பாயசம் உனக்கு நான் படைத்திடுவேனே, அப்பம் அதிரசம் உனக்கு நான் தந்திடுவேனே, தூய நெய் தீபம் ஏற்றி உன்னை நான் வழிபடுவேனே, பட்டு பீதாம்பரம், அழகு நவரத்தின மாலை நான் உனக்கு சார்த்திடுவேனே, என் உயிருள்ளவரை உன்னை நான் நினைத்திடுவேனே.

புலி வாகனனே இப்புவியெல்லாம் காப்பவனே, என் துயர் தீர்க்க நீ விரைந்து வா என் ஐயப்பா, ஸ்வாமி ஐயப்பனை வணங்குவோருக்கு எல்லா பயங்களும் போய்விடுமே.

பேச மாட்டாயா ஐயப்பா என்னுடன் நீ பேச மாட்டாயா, உடல் இளைத்து உள்ளம் வருந்துகின்றேனே, என் அப்பா ஐயப்பா என்னுடன் நீ பேச மாட்டாயா, உற்றார் உறவினர் எனக்கு யாரும் வேண்டாமே, வேண்டாமே, என் ஐயப்பன் அருள் ஒன்றே எனக்கு போதுமே, அது மட்டும் எனக்கு போதுமே.

சபரிமலைவாசா என் கவலை தீர்ப்பாய், தெய்வீக பாலகனே என் பாபத்தை போக்கிடு, பந்தளராஜன் மகனே பந்த பாசத்தை அறுப்பாய், சங்கரன் புதல்வா எனக்கு சாந்தியை கொடு மன சாந்தியை கொடு, மணிகண்டா எனக்கு நல்ல மண வாழ்க்கையை அமைத்து கொடு, நல்ல மங்கை நல்லாளை எனக்கு அமைத்து கொடுத்திடு.

மணிகண்டா என் மார்பினை காக்க, எருமேலி சாஸ்தா என் இதயம் காக்க, கணபதி சோதரன் என் கரங்களை காக்க, சிவமைந்தன் என் சிரசினை காக்க, பம்பா வாசன் என் பாதங்களை காக்க, பராசக்தி புதல்வன் என் பற்களை காக்க, வாபர் நண்பன் என் வயிற்றினை காக்க, முருகன் தம்பி என் முதுகினை காக்க.

வீரசாஸ்தா என் விரல்களை காக்க, பிரம்மாண்ட சாஸ்தா என் தொண்டையை காக்க, உமை மைந்தன் என் இமை காக்க, நவகிரஹ நாயகன் என் நகங்களை காக்க, காமத்தை வென்றவன் என் கால்களை காக்க, சிறப்பு வாய்ந்தவன் என் பிறப்பு உறுப்பை காக்க, வடிவேலன் தம்பி என் வாயினை காக்க.

உள்ளம் கவர்ந்தவன் என் உதடுகளை காக்க, வெற்றி சாஸ்தா என் நெற்றியை காக்க, கரியமால் புதல்வன் என் கழுத்தினை காக்க, உலகத்தை படைத்தவன் என் உயிரினை காக்க, அன்னதான பிரபுவே என் அங்கமெல்லாம் காக்க.

ஸ்வாமியே சரணம் அய்யப்ப சரணம்
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment