பகவான் நந்திகேஸ்வரர் பாடல்கள் (LORD NANDIKESWARAR SONGS IN TAMIL)
ஸ்ரீ நந்திதேவர் சிவபெருமானின் கயிலை மலை யை பாதுகாக்கும் தெய்வம் ஆவார். இவர் சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் முழுமுதற் குருவாகவும் கருதப்படுபவர். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். பிரதோஷ காலத்தில் பின்வரும் நந்திகேஸ்வரர் நாமாவளியை உச்சரித்தால், வாழ்க்கையில் சகல சௌபாக்யத்தையும் நாம் அடையலாம்.
நந்திகேஸ்வரர் நாமாவளி
ஓம் நந்திகேஷாய நம:
ஓம் ப்ரஹ்மரூபிணே நம:
ஓம்ஷிவத்யானபராயணாய நம:
ஓம் தீக்ஷ்ணஷ்ருங்காய நம:
ஓம் வேதபாதாய நம:
ஓம் விரூபாய நம:
ஓம் வ்ருஷபாய நம:
ஓம் துங்கஷைலாய நம:
ஓம் தேவதேவாய நம:
ஓம் ஷிவப்ரியாய நம:
ஓம் விராஜமாநாய நம:
ஓம் நடநாய நம:
ஓம் அக்நிரூபாய நம:
ஓம் தனப்ரியாய நம:
ஓம் சிதசாமரதாரிணே நம:
ஓம் வேதாங்காய நம:
ஓம் கனகப்ரியாய நம:
ஓம் கைலாஸவாசினே நம:
ஓம் தேவாய நம:
ஓம் ஸ்திதபாதாய நம:
ஓம் ஷ்ருதிப்ரியாய நம:
ஓம் ஷ்வேதோபவீதினே நம:
ஓம் நாட்யநந்தகாய நம:
ஓம் கிங்கிணீதராய நம:
ஓம் மத்தஷ்ருங்கிணே நம:
ஓம் ஹாடகேஷாய நம:
ஓம் ஹேமபூஷணாய நம:
ஓம் விஷ்ணுரூபிணே நம:
ஓம் ப்ருத்வீரூபிணே நம:
ஓம் நிதீஷாய நம:
ஓம் ஷிவவாஹநாய நம:
ஓம் குலப்ரியாய நம:
ஓம் சாருஹாஸாய நம:
ஓம் ஷ்ருங்கிணே நம:
ஓம் நவத்ருணப்ரியாய நம:
ஓம் வேதஸாராய நம:
ஓம் மந்த்ரஸாராய நம:
ஓம் ப்ரத்யக்ஷாய நம:
ஓம் கருணாகராய நம:
ஓம் ஷீக்ராய நம:
ஓம் லலாமகலிகாய நம:
ஓம் ஷிவயோகினே நம:
ஓம் ஜலாதிபாய நம:
ஓம் சாருரூபாய நம:
ஓம் வ்ருஷேஷாய நம:
ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம:
ஓம் சுந்தராய நம:
ஓம் ஸோமபூஷாய நம:
ஓம் சுவக்ராய நம:
ஓம் கலிநாஷநாய நம:
ஓம் சுப்ரகாஷாய நம:
ஓம் மஹாவீர்யாய நம:
ஓம் ஹம்ஸாய நம:
ஓம் அக்நிமயாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் வரதாய நம:
ஓம் ருத்ரரூபாய நம:
ஓம் மதுராய நம:
ஓம் காமிகப்ரியாய நம:
ஓம் விஷிஷ்டாய நம:
ஓம் திவ்யரூபய நம:
ஓம் உஜ்ஜ்வாலிநே நம:
ஓம் ஜ்வாலநேத்ராய நம:
ஓம் ஸம்வர்தாய நம:
ஓம் காலாய நம:
ஓம் கேஷாவாய நம:
ஓம் ஸர்வதேவதாய நம:
ஓம் ஷ்வேதவர்ணாய நம:
ஓம் ஷிவாஸீநாய நம:
ஓம் சின்மயாய நம:
ஓம் ஷ்ருங்கபட்டாய நம:
ஓம் ஷ்வேதசாமரபூஷாய நம:
ஓம் தேவராஜாய நம:
ஓம் ப்ரபாநந்திநே நம:
ஓம் பண்டிதாய நம:
ஓம் பரமேஷ்வராய நம:
ஓம் நிரூபாய நம:
ஓம் நிராகாராய நம:
ஓம் சிந்நதைத்யாய நம:
ஓம் நாஸாசூத்ரிணே நம:
ஓம் அனந்தேஷாய நம:
ஓம் திலதண்டுலபக்ஷணாய நம:
ஓம் வாரநந்தினே நம:
ஓம் ஸரஸாய நம:
ஓம் விமலாய நம:
ஓம் பட்டசூத்ராய நம:
ஓம் காலகண்டாய நம:
ஓம் ஷைலாதிநே நம:
ஓம் ஷிலாதனஸுநந்தநாய நம:
ஓம் காரணாய நம:
ஓம் ஷ்ருதிபக்தாய நம:
ஓம் வீரகண்டாதராய நம:
ஓம் தன்யாய நம:
ஓம் விஷ்ணுநந்திநே நம:
ஓம் ஷிவஜ்வாலாக்ராஹிணே நம:
ஓம் பத்ராய நம:
ஓம் அநகாய நம:
ஓம் வீராய நம:
ஓம் த்ருவாய நம:
ஓம் தாத்ரே நம:
ஓம் ஷாஷ்வதாய நம:
ஓம் ப்ரதோஷப்ரியரூபிணே நம:
ஓம் வ்ருஷாய நம:
ஓம் குண்டலத்ருதே நம:
ஓம் பீமாய நம:
ஓம் ஸிதவர்ணஸ்வரூபிணே நம:
ஓம் சர்வாத்மநே நம:
ஓம் சர்வவிக்யாதாய நம:
நந்திகேஸ்வரர் பாடல்கள்
நந்திகேஸ்வரா நந்திகேஸ்வரா நீ தானே சர்வேஸ்வரா, ஈஸ்வரா, ஜெகதீஸ்வரா, அருணாச்சலா, காளை வடிவம் கொண்டவனே மஹாகாளேஸ்வரா, மக்கள் கவலை தீர்க்க வேண்டுமப்பா. கயிலை மலையின் உருவம் கொண்டவனே கயிலேஸ்வரா, இக்கொடிய கலியுகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டுமப்பா.
பிரதோஷகால தலைவனே, தஞ்சை பிரஹதீஸ்வரா, உன் பக்தர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பாயப்பா. பார் புகழும் வடிவம் கொண்டவனே பார்வதி மைந்தா, உன் பெருமையை முழுமையாக கூறிட என்னால் முடியாதப்பா. மகிமை மகிமை தானே நந்தியம்பெருமானின் மகிமையை சத்தமாக கூறுவதாலே. நந்தியை நித்தம் வணங்கினால் நம் மனதில் சாந்தி நிலவும், நந்தியம்பெருமானை போற்றுவதாலே, சகல போகங்களையும் நாம் அடையலாம். உன்னை நினைத்தால் என் மனதில் சந்தோஷம் பெருகி வழியுதப்பா, உன் செவிகளில் எங்கள் குறைகளை கூறுவதாலே எங்கள் குறைகளெல்லாம் நிறைகளாகிவிடுமே.
நந்தியம்பதி பெருமானே, கயிலையின் வாயில்காப்போனே, எங்களை கயிலைக்கு கூட்டி செல்வாயப்பா. சுயசாம்பிகை பதியே, நந்திதேவா, சுயநினைவற்றவர்களுக்கு சுயநினைவை அளிப்பாய் அப்பா. கல்யாணநந்திகேஸ்வரா, கல்யாண வரம் உன்பக்தர்களுக்கு நீ தருவாயப்பா. அதிகாரநந்திகேஸ்வரா, உன் பக்தர்களின் வாழ்க்கையிலே அதிசயங்களை உண்டு பண்ணவேண்டுமப்பா. சக்திவனேஸ்வரா, சத்தியமாக நீ எனக்கு அருள் செய்ய வேண்டுமப்பா. ஆசை ஆசை உன் கொம்பின் மீது ஏறி விளையாடிட ஆசை. ஆசை ஆசை உன் தலையிலே செல்லமாக ஒரு குட்டு வைத்திட ஆசை. ஆசை ஆசை உன் அனுமதியுடன் சிவனாரின் குடும்பத்தை தரிசித்திட ஆசை.
ஆசை ஆசை, உன் அன்பு மனைவியின் பாதத்தில் விழுந்து வணங்கிட ஆசை. ஆசை ஆசை, உன் முன் நூற்றியெட்டு தோப்புக்கரணம் போட்டிட ஆசை. ஆசை ஆசை, உன் மடிமீது சற்று நேரம் உறங்கிட ஆசை. ஆசை ஆசை, உன் மீது ஏறி சகல உலங்களையும் சுற்றி பார்த்திட ஆசை. ஆசை ஆசை, என் நாவலிக்கும்வரை உன் நாமத்தை ஜெபித்திட ஆசை. ஆசை ஆசை, உன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை பார்த்து மகிழ்ந்திட ஆசை. ஆசையோ ஆசை, எங்களுடைய நியாயமான தேவைகள் நிறைவேறிட ஆசை.
ஓம் நமசிவாய ஜெய் நந்திகேஸ்வரா
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்