பகவான் தத்தாத்ரேயர் பாடல்கள் (LORD DATTATREYA SONGS IN TAMIL)
தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன்மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். இவரை திரிமூர்த்தி எனவும், திருமாலின் வடிவமாகவும் கருதுகின்றனர். பரமேசுவரனே அத்ரி முனிவருக்கு மகனாக, தத்தாத்ரேயராகத் தோன்றினார் என்பர். இவரைப் பற்றிய நிகழ்வுகள், மகாபாரதத்திலும், இராமாயணத்திலும் உள்ளன. இவரிடம் வரம் பெற்றவர்களுள் ஒருவர் கார்த்தவீரிய அருச்சுனன் ஆவார்.
தத்தாத்ரேயர், தத்தா அல்லது தத்தகுரு அல்லது தத்தாத்ரேயா என அழைக்கப்படுபவர், இவர் கடவுளாகவும் மற்றும் குருவாகவும் கருதப்படுகிறார். இந்தியா மற்றும் நேபாளத்தின் பல பகுதிகளில், அவர் ஒரு தெய்வம் என்று கருதப்படுகிறார். மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றில், தத்தாத்ரேயா மூன்று இந்து கடவுள்களின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன், கூட்டாக திரிமூர்த்தி என அழைக்கப்படுகின்றனர். கருட புராணம், பிரம்ம புராணம் போன்ற நூல்களில் அவரை மகா விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்பட்டுள்ளது. விஷ்ணுவின் சங்கு மற்றும் சுதர்சன சக்ரம், பிரம்மாவின் ஜபமாலா, சிவனின் திரிசூலம் மற்றும் டமருகம் போன்றவை அவரின் ஆறு கைகளில் உள்ளது.
பகவான் தத்தாத்ரேயர் பாடல்கள்
தத்தனின் நாமம் பரம புண்ணியநாமம், தத்தனின் நாமம் பரம புண்ணியமாகும் அவனின் நாமம் ஜெபிப்பதே நமக்கு மோட்சமார்க்கம், தத்தாத்ரேயா, என்னுடன் நீ வருவாயா, அருள் தருவாயா, அனுகிரஹம் புரிவாயா, என் வாழ்வில் அதிசயத்தை ஏற்படுத்துவாயா!
உன்னை நான் விட மாட்டேன், தத்தன், தத்தன், நான்தானே உந்தன் பக்தன் பக்தன், பக்தியில் நான் பித்தன் பித்தன், உயிரில்லாவிட்டாலும், உடல் அழிந்தாலும், உன்னை என்றும் நினைத்து நினைத்து உருகுவேனே, மருகுவேனே, உந்தன் பெருமையை பாடிடுவேனே.
எங்கும் சென்றாலும் உந்தன் படத்தையும் நான் எடுத்து செல்வேனே, எங்கும் சென்றாலும் உந்தன் நினைவினில் நான் மூழ்கிடுவேனே, என்னை யார் அடித்தாலும் தத்தா தத்தா என்றே கதறிடுவேனே, என்னை யார் அணைத்தாலும் தத்தா தத்தா என்றே உருகிடுவேனே, தத்தாத்ரேயா, தத்தாத்ரேயா, என் உயிர் தோழா. சந்திரன் சூரியன் இறந்தாலும் என்னுடைய தத்தன் இருப்பானே, பிரளய காலத்திலும் அவன் உயிருடன் இருப்பானே, தாய்மார்களின் பிரசவ காலத்திலும் அவர்களுடன் துணை இருப்பானே, நம் உயிருடன் கலந்து என்றும் நம்முடன் அவன் வாழ்வானே, அன்பு தத்தா, அருமை தத்தா, ஆசை தத்தா தத்தா தத்தா எனக்கு ஒரு அன்பு முத்தம் நீ தா தா.
கடல் அலைகள் ஓய்ந்தாலும், நம்முடைய தத்தன் ஒய்வு கொள்ள மாட்டானே, நாம் அவனை வெறுத்தாலும், நம்மிடம் அவன் கோபம் கொள்ள மாட்டானே, நாம் அவனை வழிபடாவிட்டாலும் நம்மை அவன் சபித்திடமாட்டானே, நாம் அவனை குப்பையாக கருதினாலும் நம்மை அவன் செம்மையாக வாழ வைப்பானே, நாம் அவனை குழந்தையாக பாவித்து வணங்கினால், குழந்தை கிருஷ்ணனாக நம் மடியினில் அவன் தவழ்ந்திடுவானே, குருவாக நாம் அவனை பாவித்து வணங்கினால், குரு ராகவேந்திரராக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, பெண் தெய்வமாக நாம் அவனை பாவித்து வணங்கினால், அன்னை பராசக்தியாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, பறவையாக நாம் அவனை பாவித்து வணங்கினால், கருட பகவானாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, காளையாக நாம் அவனை பாவித்து வணங்கினால், நந்திகேஸ்வரனாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, செடியாக நாம் அவனை பாவித்து வணங்கினால், புனித அன்னை துளசியாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே.
காற்றாக நாம் அவனை பாவித்து வணங்கினால், வாயு பகவானாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, நெருப்பாக நாம் அவனை பாவித்து வணங்கினால், அக்னி பகவானாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, நீராக நாம் அவனை பாவித்து வணங்கினால், அன்னை கங்கையாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, நிலமாக அவனை பாவித்து வணங்கினால் அன்னை பூமிதேவியாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, ஆகாயமாக நாம் அவனை பாவித்து வணங்கினால், ஆகாசராஜனாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, தேவனாக நாம் அவனை பாவித்து வணங்கினால், தேவேந்திரனாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே, அசுரனாக நாம் அவனை பாவித்து வணங்கினால், பக்த ப்ரஹலாதனாக நமக்கு அவன் காட்சியளித்திடுவானே.
தத்தா தத்தா என்றே அவன் பெருமையை நாமும் கூறிட, நலன்கள் யாவும் பெற்றிடுவோமே, தத்தி தத்தி தவழும் குழந்தையும் பேசிடுமே, பல்லில்லாத தாத்தாவும் பரவசம் அடைந்திடுவாரே, தத்தனின் நாமம் இவ்வுலகெங்கும் ஒலிக்கட்டும், தத்தனின் பெருமை ஈரேழு லோகத்திலும் பேசட்டும், நன்றாக பேசப்படும்.
ஓம் ஸ்ரீ குரு தத்தாத்ரேயரே நமஹ
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்