கருட பகவான் பாடல்கள் | LORD GARUDA SONGS IN TAMIL

கருட பகவான் பாடல்கள் (LORD GARUDA SONGS IN TAMIL)

பகவான் கருடன், காசிபர் – வினதை தம்பதியர்க்கு பிறந்த பறவை அரசன். சூரியனின் தேரை ஓட்டும் அருணன் இவரின் தம்பி.

திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன்.  விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார்.வைணவ சமயத்தின் பெருமாள் கோயிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.கருடன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். கருடி என்பவள், கருடனின் மனைவி. பெருமாள் கோயில் கொடிமரங்களில் கருடனின் திருஉருவம் காணப்படும். ஒருவர் உடலில் ஏறிய பாம்பின் விஷத்தை கருட மந்திரங்கள் செபிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. கருடன் பெயரில் கருட புராணம் உள்ளது. அமிர்தத்தை, தேவ லோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்தவர் கருடன் ஆவார்.

கருட மந்திரம்
‘தத்புருஷாய வித்மஹே ஸுபர்ண பஷாய தீமஹீ தன்னோ கருட ப்ரசோதயாத்’
கருட நாமாவளி

ஓம் கருடாய நம​:
ஓம் வைநதேயாய நம​:
ஓம் ககபதயே நம​:
ஓம் காஸ்யபாய நம​:
ஓம் அக்நயே நம​:
ஓம் மஹாபலாய நம​:
ஓம் தப்தகாந்சநவர்ணாபாய நம​:
ஓம் ஸுபர்ணாய நம​:
ஓம் ஹரிவாஹநாய நம​:
ஓம் சந்தோமயாய நம​:
ஓம் மஹாதேஜஸே நம​:
ஓம் மஹோத்ஸஹாய நம​:
ஓம் மஹாபலாய நம​:
ஓம் ப்ரஹ்மண்யாய நம​:
ஓம் விஸ்ணுபக்தாய நம​:
ஓம் குந்தேந்துதவளாநநாய நம​:
ஓம் சக்ரபாணிதராய நம​:

ஓம் ஸ்ரீமதே நம​:
ஓம் நாகாரயே நம​:
ஓம் நாகபூஸணாய நம​:
ஓம் விக்யாநதாய நம​:
ஓம் விஸேஸக்யாய நம​:
ஓம் வித்யாநிதயே நம​:
ஓம் அநாமயாய நம​:
ஓம் பூதிதாய நம​:
ஓம் புவநதாத்ரே நம​:
ஓம் பூஸயாய நம​:
ஓம் பக்தவத்ஸலாய நம​:
ஓம் ஸப்தசந்தோமயாய நம​:
ஓம் பக்ஸிணே நம​:

ஓம் ஸுராஸுரபூஜிதாய நம​:
ஓம் கஜபுஜே நம​:
ஓம் கச்சபாஸிநே நம​:
ஓம் தைத்யஹந்த்ரே நம​:
ஓம் அருணாநுஜாய நம​:
ஓம் அம்றுதாம்ஸாய நம​:
ஓம் அம்றுதவபுஸே நம​:
ஓம் ஆநந்தநிதயே நம​:
ஓம் அவ்யயாய நம​:
ஓம் நிகமாத்மநே நம​:
ஓம் நிராஹாராய நம​:

ஓம் நிஸ்த்ரைகுண்யாய நம​:
ஓம் நிரவ்யாய நம​:
ஓம் நிர்விகல்பாய நம​:
ஓம் பரஸ்மைஜ்யோதிஸே நம​:
ஓம் பராத்பரதராய நம​:
ஓம் பரஸ்மை நம​:
ஓம் ஸுபாந்காய நம​:
ஓம் ஸுபதாய நம​:
ஓம் ஸூராய நம​:
ஓம் ஸூக்ஸ்மரூபிணே நம​:
ஓம் ப்றுஹத்தநவே நம​:
ஓம் விஸாஸிநே நம​:
ஓம் விதிதாத்மநே நம​:
ஓம் விதிதாய நம​:

ஓம் ஜயவர்தநாய நம​:
ஓம் தார்ட்யாந்காய நம​:
ஓம் ஜகதீஸாய நம​:
ஓம் ஜநார்தநம​:ாத்வஜாய நம​:
ஓம் ஸதாம்ஸந்தாபவிச்சேத்ரே நம​:
ஓம் ஜராமரணவர்ஜிதாய நம​:
ஓம் கல்யாணதாய நம​:
ஓம் காலாதீதாய நம​:
ஓம் கலாதரஸமப்ரபாய நம​:

ஓம் ஸோமபாய நம​:
ஓம் ஸுரஸந்கேஸாய நம​:
ஓம் யக்யாந்காய நம​:
ஓம் யக்யபூஸணாய நம​:
ஓம் மஹாஜவாய நம​:
ஓம் ஜிதாமித்ராய நம​:
ஓம் மந்மதப்ரியபாந்தவாய நம​:
ஓம் ஸந்கப்றுதே நம​:
ஓம் சக்ரதாரிணே நம​:
ஓம் பாலாய நம​:
ஓம் பஹுபராக்ரமாய நம​:
ஓம் ஸுதாகும்பதராய நம​:

ஓம் தீமதே நம​:
ஓம் துராதர்ஸாய நம​:
ஓம் துராரிக்நே நம​:
ஓம் வஜ்ராந்காய நம​:
ஓம் வரதாய நம​:
ஓம் வந்த்யாய நம​:
ஓம் வாயுவேகாய நம​:
ஓம் வரப்ரதாய நம​:
ஓம் விநுதாநந்தநாய நம​:
ஓம் ஸ்ரீதாய நம​:
ஓம் விஜிதாராதிஸந்குலாய நம​:
ஓம் பதத்வரிஸ்டராய நம​:
ஓம் ஸர்வேஸாய நம​:
ஓம் பாபக்நே நம​:
ஓம் பாபநாஸநாய நம​:
ஓம் அக்நிஜிதே நம​:

ஓம் ஜயகோஸாய நம​:
ஓம் ஜகதாஹ்லாதகாரகாய நம​:
ஓம் வஜ்ரநாஸாய நம​:
ஓம் ஸுவக்த்ராய நம​:
ஓம் ஸத்ருக்நாய நம​:
ஓம் மதபந்ஜநாய நம​:
ஓம் காலக்யாய நம​:
ஓம் கமலேஸ்டாய நம​:
ஓம் கலிதோஸநிவாரணாய நம​:
ஓம் வித்யுந்நிபாய நம​:
ஓம் விஸாலாந்காய நம​:
ஓம் விநுதாதாஸ்யவிமோசநாய நம​:
ஓம் ஸ்தோமாத்மநே நம​:
ஓம் த்ரயீமூர்த்நே நம​:
ஓம் அக்ரண்யே நம​:
ஓம் ஸ்ரீபக்ஸிராஜபரப்ரஹ்மணே நம​:

கருட பகவான் பாடல்கள்

கருட தரிசனம் அதுவே நமக்கு பரம புண்ணியம், திவ்ய அனுபவம், கருட பார்வை, அதுவே தெய்வீக பார்வை, கருடன் அன்பு, அதுவே சுகானுபவம். கருடன் நாமம், அனுதினம் சொல்ல சொல்ல நம் வாழ்வினிக்குமே, நம் அல்லல்கள் தீர்ந்திடுமே, கருட பகவானே சரணம் சரணம், பக்ஷி ராஜனே சரணம் சரணம், பாவங்களை போக்குபவனே சரணம் சரணம், என் அருமை தெய்வமே சரணம் சரணம், தீனதயாள் சரணம் சரணம், சுந்தரனே சரணம் சரணம், சௌந்தர்யனே சரணம் சரணம், கற்பகவிருக்ஷமே சரணம் சரணம் காமதேனுவே சரணம் சரணம் ஒப்பற்றவனே சரணம் சரணம்.

கருட பகவானை தினந்தோறும் துதித்திட தீராத வினைகளும் தீர்ந்திடுமே, கருடனை நாமும் போற்றி பாடிடுவோமே, அதனால் நாம் கேட்பதை அவரும் தந்திடுவாரே. சுயநினைவு இழந்தாலும், தாய் தந்தை என்னை மறந்தாலும் சொந்தபந்தம் என்னை கைவிட்டாலும் உனை நானும் மறவேனே, எந்நாளும் நான் மறவேனே. பிறக்கும் முதல் இறக்கும் வரையிலும் உனை நானும் மறவேனே, நான் மறவேனே. நோய் நொடி ஏற்படினும் என் அன்பு கருட பகவானை நான் மறவேனே, நான் மறவேனே. சிக்கல்களை தீர்த்திட சீக்கிரம் வந்திடு, வாழ்வில் ஸந்தோஷத்தை தந்திட சட்டென்று வந்திடு. பரலோக பறவை வேந்தன் வேதத்தை அறிந்தவன், எங்கும் எதிலும் கருடனின் பிம்பம், கண்ணே மணியே கண்கண்டதெய்வமும் நீயே, அன்பே அழகே, விஷ்ணு ஸ்வரூபனே, உன் அழகை கண்குளிர கண்டிட நான் வைகுண்டம் வந்திடுவேனே, விரைவில் வந்திடுவேனே.

வினதையின் மைந்தன், நம் மார்பினை காக்க, விண்ணுலக தலைவன் நம் தலையினை காக்க, முக்கியமானவன் நம் மூக்கினை காக்க, விஷ்ணு பக்தன் நம் விரல்களை காக்க, நஞ்சினை அழிப்பவன் நம் நகங்களை காக்க, கருட பகவான் நம் கரங்களை காக்க, பறவை அரசன் நம் பற்களை காக்க, வைகுண்ட சேவகன் நம் வாயினை காக்க, ஈடில்லாதவன் நம் இதயத்தை காக்க, பெரிய திருவடி நம் கால்களை காக்க, வாட்சல்யன் நம் வயிற்றினை காக்க, அருணனின் சோதரன் நம் அங்கமெல்லாம் காக்க.
தாயின் துயரத்தை போக்கியவர் யாரு?

அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
நம் நாராயணனை அன்புடன் தோள்களில் சுமப்பவர் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
பறவைகளின் வேந்தன் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
நம் வாழ்வில் சகல சௌக்யத்தையும் அளிப்பவர் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
அழிவில்லாதவர் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
கருணை மனம் கொண்டவர் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
கூரிய அலகை கொண்டவர் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
தேவரகசியத்தை அறிந்தவர் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
அளவற்ற ஆற்றல் கொண்டவர் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
நம் வாழ்கை பயணம் இனிதே செல்ல வைப்பவர் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
நம் அனுமனின் நண்பன் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
நம் எல்லோர்க்கும் பாதுகாவலன் யாரு?
அவர் தானே நம்ம கருடாழ்வாரு.
கருடா கருடா என்றே நம் நாவலிக்கும்வரை நாம் கூறிடிவோமே, கருடனின் பாதங்களை நாம் சரணடைந்திடுவோமே, என்றென்றும் நாம் சரணடைந்திடுவோமே.
ஒம் ஸ்ரீ கருடாய நமஹ

எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading