அன்னை சரஸ்வதி தேவியின் பாடல்கள் (MA SARASWATI DEVI SONGS IN TAMIL)
தாய் சரஸ்வதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் செல்லப்படுகிறார். வேதத்தில், தாய் சரஸ்வதியை ஒரு ஆறாக கருதப்படுகின்றது. ‘பேச்சுக் கலையின் தேவதை’ எனப் பொருள்படும் ‘வக் தேவி’ என்ற பெயராலும் இவள் அழைக்கப்படுகிறாள். இந்துக்கள், சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரஸ்வதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன. சரஸ்வதி எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.
‘அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்’ என்கிறது கந்தபுராணம். சரஸ்வதியைப் பற்றி தமிழில் சரஸ்வதி அந்தாதி எனும் நூலை கம்பரும், சகலகலாவல்லி மாலை என்ற நூலை குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.
தமிழ்நாடு கூத்தனூரில் தனி ஆலயம் உள்ளது.
கர்நாடகாவில் சிரிங்கேரி, கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.
ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது.
அன்னை சரஸ்வதி தேவியின் பாடல்கள்
படைப்பு கடவுள் ப்ரஹ்ம தேவனை மணந்தவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
கல்வியின் தெய்வம், அழகின் உருவம் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
வீணை மீட்டும் தெய்வம் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
வெள்ளை தாமரையில் வீற்றிருக்கும் தெய்வம் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
வேத பண்டிதர்களின் இதயத்தில் வாசம் புரியும் தெய்வம் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
வெண்ணிற ஆடை உடுத்தும் தெய்வம் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
ஹயக்ரீவரின் சிஷ்யை யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
பிரம்மன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
சிருங்கேரி சாரதாம்பிகை யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
கூத்தனூரில் குடியிருக்கும் தெய்வம் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
சத்யலோகத்தில் நித்தியமாக வாசம் செய்பவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
என்னுடைய இஷ்ட தெய்வம் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
கோடி ஸூர்ய பிரகாசம் கொண்டவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
என்னை புனித ஆன்மீக பணியினில் ஈடுபடுத்துபவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
அழகிய ஆபரணங்கள் அணிந்தவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
தெய்வீக புன்னகையுடன் எப்போதும் காட்சியளிக்கிறவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
நம் மீது எப்போதும் பாசத்தை பொழிபவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
நம் எல்லோர்க்கும் அன்னை யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
புனித மகான்களை இவ்வுலகத்த்திற்கு அளித்தது யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
குற்றமற்ற குணம் கொண்டவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
நம்முடைய நாவினில் எப்போதும் குடியிருப்பவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
நம் வாழ்வினில் சந்தோஷ விளக்கேற்றி வைப்பது யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
சாந்த குணம் கொண்டவள் யாரு?
அவள் தானே நம்ம சரஸ்வதி அன்னையாரு.
ஓம் ஸ்ரீ சரஸ்வதி தாயே நமஹ
எழுதியவர்