முதல் பத்து நாயன்மார்கள் வரலாறு LIFE HISTORY OF THE FIRST 10 NAYANMARS

நாயன்மார்கள் என்போர் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார்கள் 63 நபர்கள் ஆவார்கள்.

  1. அதிபத்தநாயனார்

நாகப்பட்டினம் மீனவ குலத்தில் தலைவராக இருந்தார் அதிபத்தர். வலைவீசி எடுக்கின்ற மீன்களில் ஒன்றை சிவ பெருமானுக்கு என கடலில் போட்டு விடுவார். ஒருநாள் பொன்னொளி வீசும் ஒரு மீன் கிடைத்தது. அதைப் பிடித்து சிவனுக்கு போய்ச் சேரட்டும் என கடலில் வீசினார். அவருடைய அதிபக்தியைக் கண்ட சிவ பெருமான் அவரின் முன்பு தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்.

நாகப்பட்டணம் சிவன் கோவில் அதிபக்திநாயனார் கோவில் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது.

  1. அப்பூதியடிகள்நாயனார்

திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். நாவுக்கரசர் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். மிகுந்த நற்குணமுடையவர்.

ஒருநாள் திங்களூர் வந்த நாவுக்கரசர் அவரைச் சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்றார்.

யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் எனக் கருதி தவம் புரிந்தாரோ, மந்திரம் ஜெபித்தாரோ அப்பெருமான் முன்னிற்க செய்வது தெறியாது திகைத்தார். ஆடினார். பாடினார். நாகம் தீண்டி உயிரிழந்த அப்பூதியடிகளின் மகனை நாவுக்கரசர் உயிர் பிழை க்க வைத்தார்

பலநாள் அங்கு தங்கியிருந்து அருகிலிருந்த தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடினார்.

  1. அமர்நீதிநாயனார்

பழையாறை என்ற ஊரில் பிறந்தார் அமர்நீதியார். வணிகம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்தார். அவர் சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து மற்றும் கோவணம் அளித்து வணங்கி வந்தார்.

பக்கத்தில் உள்ள நல்லூரில் கோவில் விழாவிற்கு குடும்பத்துடன் சென்று மடம் அமைத்து அன்பர்களுக்கு அமுது படைத்து அளித்து வந்தார். எம்பெருமான் மறையவர் குலத்து பிரம்மச்சாரி வேடம் தாங்கி வந்தார். அவரை மலர்ந்து வரவேற்றார், மற்றும் அவர் வைத்த சோதனையிலும் வென்றார் அமர்நீதியார்.

  1. அரிவாட்டாயநாயனார்

கணமங்கலம் என்ற ஊரில் தோன்றினார் அரிவாட்டாய நாயனார். வேளாண் குடியைச் சார்ந்தவர். மிகுந்த பொருட் செல்வம் உடையவர். ஆண்டன்மேல் மாறாத அன்பு கொண்டவர். அவர்தம் துணைவியரும் கணவர் குறிப்பறிந்து நடக்கும் தன்மையானவர். இருவரும் திருக்கோவிலுக்குச் சென்று செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் வைத்து அமுதூட்டி வணங்குவார்கள்.

ஒரு நாள், சிவபெருமான் அவர் வீட்டிற்கு வருகை புரிந்து ஆட்கொண்டார்.

  1. ஆனாயநாயனார்

திருமங்கலம் என்ற அவ்வூரில் இடையர் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். அவர் ஆநிரைகளை காட்டுப் பகுதிக்கு கூட்டிச்சென்று மிருகங்களிடமிருந்து பாதுகாத்து பச்சைப் புல் வெளியில் மேய விட்டு, நல்ல நீர் பருகச் செய்து, கண்ணும் கருத்துமாக மாடுகளைக் காத்து வந்தார். அப்போது எம்பெருமானை புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்து தானும் இன்புறுவார்.

ஒரு நாள் எம்பெருமான் அவ்விடம் வந்து சேர்ந்தார். “நம் உலகை அடைவாய் அங்கும் உன் குழல் ஒலிக்கட்டும்” என அருள் செய்தார்.

  1. இசைஞானிநாயனார்

திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.

  1. இடங்கழிநாயனார்

கொடும்பாளூர் என்ற ஊரில் இடங்கழியார் பிறந்தார். திருக்கோவில்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார். அடியவர்களுக்கு உதவிகள் செய்து வந்தார்.

அந்த ஊரில் சிவனந்தன் என்ற அடியார் மகேசுவர பூசை செய்து அடியவர்களுக்கு அமுது செய்து வந்தார். ஒருநாள் அதற்கான பொருள் இல்லாமையால் என்ன செய்வது என தடுமாறினார். மன்னர் இடங்கழியார் பொக்கிஷத்தில் நிறைய நெல் மூட்டைகள் உள்ளது எனத்தெரிந்து, அதை திருட முடிவு செய்தார். திருத்தொண்டு செய்ய திருடுவதைத் தவிர வேறில்லை என்ற நிலையில் நடு இரவில் பொக்கிஷ அறையில் புகுந்து நெல் மூட்டையை திருட முயற்சித்தார்.

வீரர்களிடம் மாட்டிக்கொண்டார். மன்னர் முன் நிறுத்தப்பட்டார். எதற்காக இவ்வாறு செய்தீர்? என்றார். அடியார் மன்னிடம் தான் அடியவர்க்கு மகேசுவரபூசை செய்திட போதிய பொருள் இல்லாததால் திருட வந்தேன் என்றார். மன்னன் எவ்வளவு நெல், பொன், பொருள் வேண்டுமோ அனைத்தையும் எடுத்துச் சென்று தொண்டு செய்யுங்கள் என்றார். பல ஆண்டுகள் அடியவர் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

  1. இயற்பகைநாயனார்

சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். இவர் தன்னுடையதை என்னுடையது என எண்ணாதவர். அடியார் எது கேட்டாலும் வேண்டுவனவற்றை இல்லை என்று சொல்லாமல் வழங்குபவர். இவ்வடியவரின் திறத்தை உலகுக்கு அறியச் செய்ய நினைத்து சிவன் மாறுவேடம் பூண்டு புறப்பட்டார். இயற்பகை இல்லம் வந்தார். ‘உன் காதல் மனைவியைத் தா’ என்றார் அடியவர். செய்தி கேட்ட மங்கை கலங்கினார். கணவரின் மனநிலை அறிந்து தெளிந்தார். அடியார் அவரின் பற்றற்ற உள்ளத்தை பாராட்டுகிறார், உடன் தன் சுய ரூபத்தில் பெருமான் வானில் வெள்ளிவிடைமீது தோன்றி உம் துனைவியோடு நம்முடன் வா என அருள் புரிந்தார்.

  1. இளையான்குடிமாறநாயனார்

இளையான்குடி யில், வேளாளார் குலத்தில் பிறந்து விவசாயம் செய்து வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். விட்டை விட்டு வெளியில் வந்து பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது படைப்பார். மகேசுவர வழிபாடு செய்து வந்தார்.

காலப்போக்கில் அவரின் செல்வ வளம் சுருங்கியது. அவரின் மனம் சுருங்கவில்லை. கடன் பெற்றும் சொத்துக்ளை அடமானம் வைத்தும் தொண்டு செய்துவந்தார்.

ஒரு நாள் சிவபெருமான் அடியவர் வேடத்தில் வந்து அவரை சோதனை செய்து ஆட்கொண்டார்

  1. உருத்திரபசுபதிநாயனார்

திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் பசுபதி பிறந்தார். உருத்திரத்தை ஜெபித்ததால் உருத்திரப் பசுபதியார் என்ற பெயர் பெற்றார். அந்த ஊரில் உள்ள பொய்கையில் கழுத்தளவு நீரில் உருத்திர ஜபம் செய்து சிவ புரியை அடைந்தார்.

ஒம் நமசிவாய

தொகுத்து வழங்கியவர்

ரா. ஹரிஷங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading