மரகதம்

மரகதம் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பக்தி நிறைந்த பெண்ணாக பிறந்து, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட்டார். அவளது இளவயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் கணவர் நல்ல மனிதர், ஜோதிடத்தை தனது முக்கிய தொழிலாக எடுத்துக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்தார். தம்பதிகள் இருவரும், கடவுளுக்கு பூஜை செய்து, விருந்தினர்களுக்கு உணவு வழங்கி, மிகவும் சிறப்பாக இருந்தனர்.

மரகதம் தன் கணவனை கடவுளுக்கு நிகரானவனாக நடத்தினாள். அவனுக்கு நல்ல மரியாதையையும் கொடுத்தாள். அதிகாலையில் எழுந்து, கிணற்றில் தண்ணீர் எடுத்து, தங்கள் வீட்டில் பூஜை செய்ய தன் கணவருக்கு உதவி செய்து, விருந்தினர்களை சந்தித்து, சிரித்த முகத்துடன் அவர்களுக்கு உணவு தருவது வழக்கம்.

காலப்போக்கில் அவள் ஒரு தெய்வீகக் குழந்தையைப் பெற்று, “சேஷாதிரி” என்று பெயர் சூட்டினாள். சேஷாதிரி தெய்வீகக் குழந்தையாக, சிவனின் அம்சங்களைக் கொண்டிருந்தது. அவர் தனது சிறுவயதிலேயே அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அவர் நன்றாக படித்து இருந்தாலும், அவருக்கு உலக விவகாரங்களில் ஆர்வம் இல்லை.

இது அவரது பெற்றோர்களை கவலையடையச் செய்தது. அவரை சரிசெய்ய அவர்கள் மிகவும் முயன்றார்கள். ஆனால் எந்த பயனும் இல்லை. தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். அவரும் அவரது தாயாரும் காஞ்சிபுரத்திலுள்ள ஒரு கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு இடம் மாற்றினர்.

கணவன் இறந்த பிறகு, அவள் பலவீனமடைந்து தன் ஆற்றலை இழந்து, தன் கணவனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், இறுதியாக தன் மகன் சேஷாத்திரியை ஆசீர்வதித்து, தன் இளவயதிலேயே இறந்துவிட்டாள். அவள் இறந்த பிறகு அவள் முக்தி அடைந்ததாக நம்பப்படுகிறது.
தெய்வீக அன்னையை வணங்கி ஆசி பெறுவோம்.

“ஓம் ஸ்ரீ மரகதம் அன்னையே நமஹ”
“ஓம் ஸ்ரீ சேஷாதிரி சுவாமிகளே நமஹ”
“ஓம் நமசிவாய ”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment