சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் சில கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. இவரை குல தெய்வமாகவும் பலர் வணங்கி வருகிறார்கள். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. சுடலை என்பது உயிரற்ற உடலை குறிக்கும் மயானத்தில் எரிந்த பிணத்தை உண்டதால் சுடலைமாடன் என பெயர் பெற்றார்.காளை உருவம் எடுத்து பகவதியம்மன் கோயில் கோட்டையை சிதைத்ததால் இவர் காளையின் தலையுடனும் காட்சியளிப்பதுண்டு.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி சுடலை மாடன் கோயில் ,சங்கனாபுரம்-அருள்மிகு ஸ்ரீ வடக்கு-அத்தியான் சுடலை மாடசாமி திருக்கோவில் , பாலாமடை கீழக்கரை சுடலை மாடன் கோவில், பெருமாள்புரம் தோட்டக்கார மாட சுவாமி, நாகர்கோவிலுக்கு அருகே வடலிவிளை ஊரில் உள்ள சுடலைமாடன் கோவில், மற்றும் வடக்கு சூரங்குடியில் உள்ள சுடலைமாடன் கோவில்போன்றவை மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் சிலவாகும்.
பகவான் சுடலை மாடன் பாடல்கள்
வாடா வாடா, சுடலை மாடா, அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்காம எங்கிட்டும் நிற்காம, என் கவலை தீர்க்க உடனே நீ ஓடி வாடா, உன் மகனை பார்க்க விரைந்து வந்திடடா, என் எதிரில் வந்து நீயும் நில்லடா.
காவல்காரா, காவல்காரா எங்களை கண்ணிமை போல் காக்கும் காவல்காரா, இவ்வுலகத்த்தில் மாடாக உழைத்தாலும் சுடலையின் அருளின்றி எந்த பலனும் நமக்கு கிடைக்காதே.
நீ விரும்பும் அசைவ சமையல் நான் உனக்கு படைக்கமட்டேன், நல்ல சைவ படையல் நன்றாக செய்து நான் உனக்கு படைத்திடுவேனே, சுவையுடன் அதனை நான் உனக்கு பரிமாறி உபசரித்திடுவேனே, உன்னை நன்றாக உபசரித்திடுவேனே.
பெண்களை தெய்வமாக மதிக்கும் சுடலைமாடா, ஒரு நலல பெண்ணை எனக்கு நீ திருமணம் செய்து வையப்பா, என் வீட்டில் குத்துவிளக்கேற்ற ஒரு தங்கமான பெண்ணை நான் மணம் புரிந்து கொள்ள ஒரு நல்ல வழியை நீயும் காட்டிடுவாயப்பா எனதருமை சுடலைமாடா, நான் இதுவரை பட்ட துன்பம் போதும் அப்பா, இனிமேலாவது ஒரு நல்ல வாழ்க்கையை நீ அமைத்து கொடுப்பா, சீக்கிரமாக நீ அமைத்து கொடுப்பா.
சுடலை மாடன் என்று சொன்னாலே நம் மனக்கவலை தீர்ந்திடுமே, சுடலை என்று சொன்னாலே அவனும் ஏழு கடலையும் தாண்டி வந்திடுவானே, விடலை பருவத்திலிருந்து சுடலைமாடனை நாமும் கும்பிடவேண்டுமே, வாயில் கடலையை மென்றிருந்தாலும், ஐயா சுடலை என்று ஓங்கி குரல் கொடுத்து நாமும் கூப்பிட வேண்டிடுமே, அவனை கூப்பிட வேண்டிடுமே, அவனும் வந்திடுவானே நம்மிடம் விரைந்து வந்திடுவானே.
சிவசக்தி புதல்வா, சுப்பிரமணியனின் அம்சமே, முதல்வா, தேவர்களின் தலைவா, கயிலை வாசா, நம் சுடலை சம்சார கடலில் இருந்து நம்மை மீட்பானே, சுடுகாட்டில் நான் எரியுண்டாலும் என் சுடலையை நான் மறக்கமாட்டேனே, சுடும் நெருப்பினுள் நான் புகுந்தாலும் என் சுடலையினால் நான் துன்பப்படமாட்டேனே, காத்து, கருப்பு பில்லி, சூனியம், செய்வினை, ஏவல், சத்ரு தொல்லை எதுவும் நம்மை அண்டாது, நம் சுடலை நம்மிடம் இருக்கும் போது.
நமக்காக இப்பூவுலகில் அவதரித்த நம் சுடலை மாடக்கடவுளை, நாம் தினம் தினம் போற்றி பணிந்திடுவோமே, அன்புடன் பணிந்திடுவோமே, சுடலை சுடலை என்றே சொல்லி வர, இவ்வுலக ஆசைகள் நம்மை விட்டு நீங்கி விடுமே, கண்டிப்பாக நம்மை விட்டு நீங்கி விடுமே.
ஓம் ஸ்ரீ சுடலைமாட ஸ்வாமி நமஹ
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்