சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுகின்றார். இவர் அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார். உயிர்களை அழிக்க மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான உருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது.
பகவான் சிவன் பாடல்கள்ஓரே ஒரு தெய்வம் அவர் தானே எங்கள் பரமசிவன், ஒரே ஒரு தெய்வம் அவர் தானே எங்கள் ஓப்பற்ற பரம்பொருள், ஓரே ஒரு தெய்வம் அவர் தானே எங்கள் அருட்கடல்.
சந்திரனும் நீயே சூரியனும் நீயே அழகு இந்திரனும் நீயே, குழந்தை முருகனும் நீயே, அன்னை காமாட்சியும் நீயே, ப்ரஹ்மனும் நீயே, பிரஹலாத துருவனும் நீயே, மார்கண்டேயனும் நீயே, மாயாவி மஹாவிஷ்ணுவும் நீயே.
நஞ்சுண்டேஸ்வரா எந்தன் நெஞ்சில் எப்போதும் நீ இருப்பாயப்பா, தீய மக்களின் நெஞ்சிலுள்ள விஷத்தை நீக்குவாயப்பா, சிவனே சிவனே அழகிய பரமசிவனே, தினந்தோறும் உன்னையே நினைத்து உருகுகின்றேனே, வைதீஸ்வரா எனக்கு நல்ல வைத்தியம் நீ பார்ப்பாயப்பா, மகிமை பொருந்தியவரே, அனாதை ரட்ஷகரே, அற்புதம் செய்தவாரே, என் வாழ்வில் ஆனந்தம் அளிக்க வேண்டுமப்பா. பில்லி, சூன்யம் ஏவல் செய்வினையிலிருந்து என்னை காத்தவன் நீயே, என்னை காத்தவன் நீ தானே, உன்னை என்றுமே மறக்கவே மாட்டேன், நான் உன்னை என்றுமே மறக்கவே மாட்டேன். திருமணஞ்சேரி சென்று உன்னை நானும் தரிசித்தேனே தரிசித்தேனே,எனக்கு நீயும் நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைப்பாயா, வைப்பாயா, வைப்பாய் நீயே.
அனையன் போல குழலூதி உன்னை பாட விரும்புகின்றேனே, சாக்கியரை போல கல்லை மலராக பாவித்து உன்னை பூஜை செய்ய நினைகின்றேனே, கண்ணப்பனை போல என் கண்ணையும் உனக்கு தருவேன் நானே, உடனே என் கண்ணிரண்டினையும் தந்திடுவேன் நானே.
அவ்வை அன்னையை போல உன் உலகம் செல்ல விழைகின்றேனே, காரைக்கால் அன்னையை போல பேயுருவம் கொண்டு உன்னை சேவிக்க விரும்புகின்றேனே உன்னை அன்புடன் சேவிக்க விரும்புகின்றேனே.
பூசலாரை போல என் மனதில் உனக்கு ஒரு அழகிய கோவில் கட்ட ஆசைப்படுகின்றேனே, மிக மிக ஆசைப்படுகின்றேனே, சுந்தரரை போல எனக்கு பெண் கேட்டு உனையே தூதனுப்ப விரும்புகின்றேனே, விரும்புகின்றேனே.
கலிகாமரை போல களிப்புடன் உனை எப்போதும் நினைக்க அருள் புரிய வேண்டுகின்றேனே, வேண்டுகின்றேனே, சட்டியாரை போல உன் அடியாரை துன்புறுத்துவோரை நான் தண்டிப்பேனே தண்டிப்பேனே, கூற்றுவனை போல என் தலை மேல் உன் பாதம் வைத்து அருள் செய்விரே, எனக்கு நீ அருள் செய்விரே.
அதிபத்தரை போல உன் மீது அளவுக்கு அதிகமாக பக்தி வைத்திடுவேனே, மிக மிக அதிகமாக பக்தி வைத்திடுவேனே, உன் அடியார்களை போல நான் அளவில்லா பக்தி வைத்திடுவேனே, உன் மீது எப்போதும் அளவில்லா பக்தி வைத்திடுவேனே, மார்கண்டேயரை போல எமனிடமிருந்து காக்க விழைகின்றேனே, என்னை காக்க விழைகின்றேனே.
கொடிய நோயின் தாக்கம் இருப்பினும் நொடி பொழுதும் உன்னை நான் மறக்கவே மாட்டேனே, உன்னை நான் எப்போதும் மறக்கவே மாட்டேனே, உன் மடியில் தவழும் எனதருமை அழகு முருகனை என் மடியில் வைத்து தாலாட்ட ஆசைப்படுகின்றேனே, சிறிது நேரம் தாலாட்ட ஆசைப்படுகின்றேனே.
விநாயகனின் தந்தையே, என் வினைகளை தீர்த்த்திடுவாய், பரமேஸ்வரா என்றால் பரம புண்ணியம் வந்து சேர்ந்திடுமே, எங்களை வந்து உடனடியாக சேர்ந்திடுமே, கோடிலிங்கேஸ்வரா, உனை கோடி முறை பூசித்தாலும் எங்கள் பக்தி வளர்கின்றதே எங்களுக்கு உன் மேல் மேலும் மேலும் பக்தி வளர்கின்றதே.
சிவராத்திரி அன்று உன்னை பூசிப்போருக்கு சிவலோக பாக்கியம் அளித்திடுவாயே, பிரதோஷம் அன்று உன்னை பூசிப்போருக்கு சகல தோஷங்களையும் நீக்கிடுவாயே, உடனடியாக நீக்கிடுவாயே, சர்வேஸ்வரா, சர்வலோக ஈசா, நீ ஆசைப்பட்டால் என் ரத்தம் முழுவதுடன் உனக்கு காணிக்கையாக அளித்திடுவேனே, உடனடியாக உனக்கு காணிக்கையாக அளித்திடுவேனே.
பரமசிவனை கண்டேன், பரவசம் அடைந்தேனே, மிக மிக பரவசம் அடைந்தேனே.
ஓம் நமசிவாய
எழுதியவர்
ரா ஹரிஷங்கர்