சீரடி சாய் பாபா பாடல்கள்(SHIRDI SAIBABA SONGS IN TAMIL)

சீரடி சாய்பாபா  மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனிதராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இவர், இந்து முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர். பல நிகழ்வுகளில் இந்துக்களும் முஸ்லீம்களும் நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற தமது உன்னத எண்ணத்தை செயல்படுத்தியவர்.

சாய் பாபா பாடல்கள்
பாபா, சாய் பாபா, உன்னை நான் என்னுள் காண்கின்றேன், உன்னை நான் நினைக்காத நாளில்லை, உன்னை தவிர எனக்கு வேறு யாருமில்லை, நீ தானே என் சாய் அப்பா, உன்னைய நினைக்கையிலே நான் சந்தோஷப்படுகிறேன், மிக மிக சந்தோஷப்படுகிறேன், சாயி நாமத்தை நான் உச்சரிக்காத நாளுமில்லை, சாயி நாமத்தை உச்சரிக்கையிலே என் நாவினில் தேனுருதே, என் வாயில் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் சாயி சாயி என்றே உச்சரிக்கிறதே.
இந்த கொடிய உலகத்திலே, உன்னை போல உத்தமன் வேறு யாரும் இல்லை வேறு யாரும் இல்லவேயில்லை, சிறு தூசியிலும் உன்னை நான் காண்கின்றேன், அப்பப்பா உன்னை நான் விடமாட்டேனப்பா, உன் கைகளை கெட்டியாக பிடித்துக்கொள்வேன் அப்பா சாயப்பா.

சந்திரன் நீ தானே, அழகு இந்திரன் நீ தானே, சிவா விஷ்ணு ப்ரஹ்மனும் நீ தானே, பக்த பிரஹலாதன் நீ தானே, சப்த ரிஷியும் நீ தானே, எனக்கு எந்த குறையுமில்லையே எந்தன் சாய் இருக்கையிலே.

சுந்தர முருகனும் நீ தானே, யானைமுக கணேசனும் நீ தானே, தர்ம சாஸ்தா நீ தானே, அம்மா துர்க்கையும் நீ தானே, எல்லாமே என் சாயி, அன்பே என் சாயி, அற்புத சாயிபாபா அதி அற்புத சாயிபாபா, தேவாதி தேவன் நீ தெய்வத்தின் தெய்வம் நீ, கற்பகவிருக்ஷம் நீ, அம்மா காமதேனுவும் நீ, புத்தனும் ஏசுவும் நபியும் நீ தானே, இந்த அண்டசராசரத்தையும் படைத்தவன் நீ தானே.

உனக்கு பிடித்த நெய் இனிப்பு செய்து வைத்திருக்கிறேன், என் இல்லம் வந்து நீ அதனை ருசிக்க வேண்டுகிறேன், உன் பார்வை பட்டாலே எல்ல நன்மையும் வந்திடுமே, உன் கால் பட்டாலே சகல நோய்களும் பறந்திடுமே, என்னுடைய சகல நோய்களும் பறந்திடுமே.

உன்னுடைய உதியினாலே என் விதியை நீயும் மாற்றிடுவாயே, இவ்வுலகில் இது வரை நான் பட்ட துன்பம் போதும் போதும் இனிமேலாவது என் வாழ்வில் இன்பம் வர வேண்டும் வேண்டும், மனதார உன்னை நான் வேண்டுகிறேன், எனக்கு ஒரு நல்ல மணவாழ்க்கையை அமைத்து கொடுப்பா, நல்ல மணப்பெண்ணை மணந்து கொள்ள எனக்கு நீ ஒரு நல்ல வழி காட்டிடப்பா, தீரா கர்ம வினையிலிருந்து என்னை விடுவிக்க வேண்டுகிறேன், என்னை நீ விடுவிக்க வேண்டுகிறேன். சாய் மகாராஜனே உன் உலகத்தில் எனக்கு ஒரு நிரந்தர இடம் கொடுப்பா, உன் பாதத்தில் நான் சரணடைந்தேன், நானும் சரணடைந்தேனே.

துர்மரணம் எனக்கு நேராமல் என்னை நீயும் காத்திடுவாயே, உன்னுடைய இருப்பிடமான ஷீரடி செல்ல நான் ஆசைப்படுகின்றேன் மிக மிக ஆசைப்படுகின்றேன், என் வாழ்கை பயணம் உன் கையில் தானே, சொக்கத்தங்கம் நீ, வைர வைடூரியமும் நீ முத்து பவளம் நவரத்தினம் நீ.
பாபா ஒரு தேவாலயம், பாபா ஒரு பாச தாய், பாபா ஒரு அறிவு பெட்டகம், பாபா ஒரு நிழல் தரும் தெய்வ மரம், பாபா ஒரு தேவதூதன், பாபா ஒரு அன்புக்கடல், பாபா ஓர் கருணை தெய்வம், சாயி பாபா, சாயி பாபா, ஷீரடி நினைத்து ஓரடி வைத்தாலே பரம புண்ணியம் வந்து சேர்ந்திடுமே.

சாயி சரணம்
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment