இந்திரன் என்பவர் தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகாலத்தில், முக்கியமான தேவர்களில் ஒருவராக வணங்கப்பட்டவர். இவருக்கு மகேந்திரன், உபேந்திரன் மற்றும் தேவேந்திரன் என்ற பெயர்களும் உண்டு.
ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவருடைய வீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மிக அழகிய தேரை தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன், ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர் வஜ்ஜிராயுதத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவர் மிக அழகிய கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் இவருக்கு சுந்தரன் என்ற பெயரும் உண்டு. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்றும் கூறப்படுகிறது. யாகங்களில் படைக்கப்படும் படையலை, இந்திரன் தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறான். இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.
இந்திர பகவான் பாடல்கள்
மந்திரம்: ஓம் ஸ்ரீ தேவேந்திராய நமஹ
இந்திரனே, என் அழகிய சுந்தரனே, ஆயிரம் கண் கொண்டவனே, உன்னை ஆயிரம் நாமங்களால் துதித்திடுவேனே, எனக்கு நீ சகல சௌபாக்கியங்களையும் தந்தருள்வாயே.
ஸ்வர்கலோகத்தின் அதிபதியே, என்னை நீ சுவர்க்கத்திற்கு கூட்டி செல்வாயா, தேவலோக ராஜனே, தேவாதி தேவனே, பல வகை ஹோமங்களை செய்து உன்னை நான் குளிர்விப்பேனே.
முப்பது முக்கோடி தேவர்கள் தலைவா, உனக்கு இப்பூவுலகில் கோவில்கள் இல்லையப்பா, அதனால் எனக்கு கவலைகள் இல்லையப்பா, ஏனென்றால் எந்தன் நெஞ்சினிலே உனக்கு நான் பல்லாயிரம் கோவில்கள் கட்டியிருக்கிறேனே.
ஆசையோ ஆசை, அழகிய இந்திராணி பதியே, தாய் இந்திராணியை பார்த்து வணங்கிட ஆசை, மிக்க அன்புடன் அவள் பாத கமலத்தில் விழுந்து வணங்கிட ஆசை, உந்தன் மைந்தன் ஜெயந்தனை கண்டு பேசி மகிழ்ந்திட ஆசை,
ஆசையோ ஆசை, உந்தன் குரு பிரஹஸ்பதியை வணங்கிட ஆசை, உந்தன் வஜ்ராயுதத்தை தொட்டு மகிழ்ந்திட ஆசை, உந்தன் ரத சாரதி மாதலியை வாயார புகழ்ந்திட ஆசை, முப்பது முக்கோடி தேவர்களை பார்த்து தொழுதிட ஆசை, அமிர்தத்தை பருகிட ஆசை, உந்தன் ஆயிரம் நாமங்களை தினந்தோறும் ஜெபித்திட ஆசை.
ஆசையோ ஆசை, உந்தன் அழகு மாளிகையை சுற்றி பார்த்திட ஆசை, புனித அன்னையர்கள், ரம்பா, ஊர்வசி மற்றும் மேனகை முதலியானோர்களை இரு கரம் கூப்பி தொழுதிட ஆசை, இந்திரப்பா உன் கால்களை மிருதுவாக பிடித்து விட எனக்கு கொள்ளை ஆசையப்பா, உந்தன் கரங்களை பிடித்து கைகுலுக்கிட ஆசை, உந்தன் மடியினில் சற்று நேரம் படுத்து உறங்கிட ஆசை, உந்தன் அடிமையாக உந்தன் காலடியில் நிரந்தரமாக சேவை புரிந்திட ஆசை.
ஆசையோ ஆசை, தேவர்களான சூரிய சந்திரர்களை அவர்களின் உலகத்திற்கு சென்று வணங்கிட ஆசை, வாயு பகவானை வாயார புகழ்ந்திட ஆசை, அக்னி பகவானை அணைத்து மகிழ்ந்திட ஆசை, வருணனை வர்ணித்து பாடிட ஆசை, யம பகவானை சாம கீதம் பாடி தொழுதிட ஆசை, அழகாபுரிக்கு சென்று அழகிய குபேரனை வணங்கிட ஆசை, பாதாளலோகத்திற்கு சென்று நாகங்களை வணங்கிட ஆசை, எனது இந்த ஆசைகளை நீ கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் எனதருமை இந்திரப்பா.
இந்திரப்பா நீ என்னை கண்டித்தாலும் தண்டித்தாலும் நான் எப்போதும் உன் சரண கீதம் பாடிடுவேன், உன் காலடி தூசியும் எனக்கு மிக மிக புனிதமானதே, அது அமிர்தத்திற்கு ஒப்பானதே, இக்கொடிய கலியுகத்திலிருந்து என்னை நீ விடுவிப்பாயப்பா, எனதருமை இந்திரப்பா உனதுலகில் என்னை நீ சேர்த்து கொள்வாய் இந்திரப்பா, என்னுடைய புலமையை வைத்து தினந்தோறும் உன் புகழ் பாடிடுவேனே, உன் சிறப்பினை இவ்வுலங்கெங்கும் பரப்பிடுவேனே. என் சிரமமான வாழ்வினை நீ சரி செய்ய வேண்டும், விரைவில் ஒரு நல்ல மணவாழ்வினை நீ எனக்கு அளிக்க வேண்டும், நான் இன்பமாக என்றென்றும் வாழ நீ அருள் புரிய வேண்டும், பல அற்புதங்களை புரிந்திட வேண்டும் என்னை உன் மகனாக கருதிட வேண்டும்.
ஸ்ரீ தேவேந்திர பகவானே சரணம் சரணம் சரணம்
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்