திருஞானசம்பந்தமூர்த்தி(Tirugnana Sambanda Moorthi Nayanar)
சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் ஒருவராவார்.
வரலாறு
திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார் ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும்.
கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார்.
அற்புதங்கள்
1.மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை.
2.சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும் பெற்றது.
3.அபாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது.
4.பாண்டியனுக்குக் கூனையும், சுரத்தையும் போக்கியது.
5. விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.
உபநயனம்
உபநயனப் பருவத்தில் ஞானசம்பந்தருக்கு உபநயனம் நடைபெற்றது.
சோதியிற் கலத்தல்
பெருமானது அசரீரியின்படி மனைவியோடும் உடன் வந்தாரோடும் வைகாசி மூல நன்னாளில் சோதியில் கலந்தார்.
கோயில்
திருஞான சம்பந்த மூர்த்தி கோயில் ஒன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோயில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு சிறப்பாக கட்டப்பட்டது. இக்கோயிலில் சம்பந்தரே மூலவராகவும் உற்சவ மூர்த்தியாகவும் உள்ளார் வருடாவருடம் வைகாசி மாதத்தில் இக்கோயிலில் இவ்வூர் மக்களால் சிறப்பாக திருவிழா நடத்தப்பட்டு உற்சவ மூர்த்தி பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் உலாவருவார்.
இத்தலம் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் புலவன்காடு என்ற ஊரிலிருந்து கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஓம் ஸ்ரீ சம்பந்தரே நமஹ
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்